தந்தை பிறந்தநாளதா கண்டுக்கல தன் அம்மாவின் பிறந்தநாளுக்கவாது வாழ்த்து சொன்னாரா விஜய் ?

0
606
vijay
- Advertisement -

நடிகர் விஜய்க்கு அவரது தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் இருவரும் இப்பொழுது சரியாக பேசிக் கொள்வதில்லை. இருவருக்கும் இடையில் சிறு சிறு சண்டைகள் என இனையத்தில் சில செய்திகள் வந்தவண்ணமே இருந்தது. இதை உண்மையாக்கும் வகையில் எஸ்.ஏ.சந்திர சேகர் அவருடைய என்பதாவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். அந்த புகைப்படங்களை எஸ்.ஏ.சந்திரசேகர் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படங்களில் சந்திரசேகரும் அவரது மனைவி மட்டுமே இருக்கிறார்கள். இதனால் எஸ்.ஏ.சி க்கும் நடிகர் விஜய் அவர்களுக்கும் பேசிக் கொள்வதில்லை என்ற கூற்று உண்மை என சிலர் சொல்லத் தொடங்கினார்கள்.

-விளம்பரம்-

எளிமையாக நடைபெற்ற சாதாபிஷேகம்
விழா :-

- Advertisement -

இவர்களுக்கிடையில் இருக்கும் உறவு முட்டிக்கொண்டு உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில். இதற்கு அடுத்தாற் போல் ஒரு சம்பவம் நடந்தது எஸ்.ஏ.சந்திரசேகரும் அவரது மனைவியும் திருக்கடையூர் கோவிலுக்கு சென்று சாதாபிஷேகம் விழா செய்தனர். சாதாபிஷேகம் விழாவில் பெற்ற பிள்ளைகள் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. நடிகர் விஜய் இருந்து நடத்தி வைக்க வேண்டிய சதாபிஷேகம் விழா எளிமையான முறையில் எஸ்.ஏ.சந்திரசேகரும் அவரது மனைவியை மட்டுமே பூஜையை நடத்தினார். இந்த சம்பவமும் தந்தை மகனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இல்லை என்பதை உறுதிப்படுத்தியது.

எஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த விளக்கம் :-

-விளம்பரம்-

இந்த நிகழ்வுல்லாம் வைத்து நடிகர் விஜய்யின் ஹெட்டர்ஸ் மற்றும் அவரை பிடிக்காத சில பேரும் விஜய் மீது குற்றம் சாட்ட தொடங்கிவிட்டனர். பெற்ற தகப்பன் தாயே விஜய் அவர்கள் மதிக்கவில்லை, சரியாக பார்த்து கொள்ளவில்லை என்றும் பெரியவர்களே மதிப்பது என்ற விஷயம் திரையில் நடிப்பதோடு சரி என்று இணையத்தின் விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதை எடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகன் ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் தான் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை எங்களுக்குள் வேறு எந்த பிரச்சினைகளும் இல்லை என தெரிவித்தார்.

ஷோபா சந்திர சேகர் :-

இவர் மெல்லிசை இசைக்குழுவில் பாடகராக உள்ளார். இவரின் முதல் மெல்லிசை இசை நிகழ்ச்சியான சமர்ப்பணம், விஜய் தொலைக்காட்சியில் 2003 ஆம் ஆண்டில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பின் திரைப்படங்களில் பின்னணிப் பாடகர் ஆனார். மேலும் இவர் எழுதிய சில கதைகளை இவரின் கணவர் மற்றும் திரைப்பட இயக்குநரான எஸ். ஏ. சந்திரசேகர் திரைப்படமாக உருவாக்கினார். சில திரைப்படங்களைத் தயாரித்தது மட்டுமின்றி சில படங்களை இயக்கியுமுள்ளார். பல வெளிநாட்டு இசைக் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார். அண்மையில் ஆனைமுகமும் ஆறுமுகனும் எனும் பெயரில் பக்திப்பாடல் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.

அம்மாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறினாரா விஜய் :-

நேற்று விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் தனது 73 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வந்தார். ஏற்கனவே விஜயின் மக்கள் இயக்கத்தை தந்தையை எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல் கட்சியாக பதிவு செய்ய எடுத்த நடவடிக்கையால் மனக்கசப்படைந்த விஜய் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார் என்றவாறு செய்திகள் வந்தது. பின்பு தன் தந்தையின் 81 பிறந்தநாளில் கலந்து கொள்ளவில்லை நடிகர் விஜய். ஆகையால் இணையத்தில் நடிகர் விஜய் தனது அம்மாவுக்கு நேற்று பிறந்தநாள் வாழ்த்து கூறினார் இல்லையா என்று கேள்விகள் எழுப்பியவாரே உள்ளனர்.

Advertisement