என் குடும்பத்திற்க்கு தெரியும். ஆனால், என் குடும்பம் ஒப்புக்கொள்ள வில்லை என்றால் நடக்காது- மனம் திறந்த டாப்ஸி.

0
685
tapsee

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டு இருக்கிறார் நடிகை டாப்ஸி பன்னு. தமிழில் 2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி . அதனைத் தொடர்ந்து நடிகை டாப்சி அவர்கள் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இதற்கு முன்னே இவர் 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஜும்மண்டி நாடம் என்னும் படத்தில் நடித்து உள்ளார். இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது டாப்சி பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிகை டாப்சிக்கு சினிமா துறையில் ஒரு அந்தஸ்து கிடைத்தது என்று சொல்லலாம். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் கலக்கிக் கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகை டாப்சி அவர்கள் வெளிநாட்டு நபரை காதலித்து வருவதாக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வதந்திகள் வந்து கொண்டுள்ளன. இதற்கு நடிகை டாப்ஸி பதிலளித்துள்ளார். சமீப காலமாக டாப்சீ பன்னு அவர்கள் ஒரு வெளிநாட்டவர் உடன் காதல் இருப்பதாக சோஷியல் மீடியாவில் கூறப்பட்டு வந்தது.

- Advertisement -

ஆனால், இது குறித்து டாப்ஸி எந்த ஒரு பதிலையும் கூறவில்லை. இந்த நிலையில் பிரபல ஆன்லைன் மூலம் இதுகுறித்து செய்தி கிடைத்துள்ளது. இதை டாப்ஸி பண்ணு அவர்கள் தன்னுடைய தாயின் முன்பாக கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு அன்னையர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த அன்னையர் தின சிறப்பு நேர்காணலில் டாப்ஸி அவர்கள் பங்கு பெற்றார். அதில் அவர் டென்மார்க்கில் வசிக்கும் பூ பந்து வீரர் மத்தியாஸ் போவுடன் டாப்ஸி டேட்டிங் செய்வதாக மனம் திறந்து கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பது, என்னுடைய வாழ்க்கையிலும் ஒருவர் இருக்கிறார்.

இது பற்றி என்னுடைய குடும்பத்திற்கு தெரியும். என் குடும்பம், என்னுடைய சகோதரி, எனது பெற்றோர் உட்பட அனைவரும் என்னுடன் இருக்கும் நபரை பிடித்து இருக்க வேண்டும் என்பது தான் எனக்கு முக்கியம். இல்லை என்றால் அது எனக்கு சரிப்பட்டு வராது என்று விலகி விடுவேன் என்று கூறினார். மேலும், ஏப்ரல் மாதம் 2020 ஆம் ஆண்டு மத்தியாஸ் போ 39 வயதில் தொழில்முறை பூப்பந்து வீரராக ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

-விளம்பரம்-

அதில் அவர் மிகவும் மன ரீதியாக சோர்வடைந்து உள்ளதாக வெளிப்படுத்தினார். அதோடு அவர் டாக்சியை விரைவில் திருமணம் செய்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது. தற்போது ஹசீனா தில்ருபா, ஷபாஷ் மீத்து உள்ளிட்ட பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். டாப்ஸி அவர்கள் தமிழில் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ஜன கண மன என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ரஹ்மான் மற்றும் கவுதமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக தெரியவந்துள்ளது.

Advertisement