தி.மு.கல இருந்துட்டு சாமியாரா நடித்துள்ள லியோனி – அதற்கு அவரின் விளக்கம் (ரஜினி படத்தில் கூட நடிக்காததற்கு அவர் சொன்ன காரணம்)

0
660
leone
- Advertisement -

பன்னிக்குட்டி பட அனுபவம் குறித்து திண்டுக்கல் லியோனி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழில் மிகச் சிறந்த பட்டிமன்ற பேச்சாளராக திகழ்பவர் திண்டுக்கல் லியோனி. இவர் ஆசிரியர், மேடைப்பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவை பட்டிமன்ற நடுவர் என பன்முகம் கொண்டு இருக்கிறார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு 2010 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கப்பட்டிருந்தது. இவர் திண்டுக்கல்லில் புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.

-விளம்பரம்-

தற்போது இவர் பட்டிமன்றத்தில் நடுவராக இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் அரசியலில் திமுகவிற்கு ஆதரவாக பல ஆண்டுகளாக நட்சத்திர பேச்சாளராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் கங்கா கௌரி என்ற படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தில் வடிவேலு, அருண் குமாருக்கு அப்பாவாக நடித்து இருந்தார். அதற்கு பிறகு இவர் எந்த படத்திலும் நடிகை வில்லை. 25 வருடத்திற்கு பிறகு மீண்டும் இவர் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : இன்று International Kissing Day – சங்கவி முதல் சமந்தா வரை விஜய் லிப் கிஸ் கொடுத்த டாப் ஏழு நடிகைகள் – இதோ புகைப்படங்கள்.

பன்னிகுட்டி படம்:

தற்போது லியோனி நடித்து இருக்கும் படம் பன்னிகுட்டி. இந்த படம் ஜூலை 8ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் யோகிபாபு, ராமர் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படம் அனுபவம் குறித்து லியோனி சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, கங்கா கௌரி படத்திற்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. சூழ்நிலை காரணமாக பல படங்களை தவற விட்டேன். இடையில் காதலர் தினம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் நான் பட்டிமன்ற நடுவராக 11 நாட்கள் நடித்தேன்.

-விளம்பரம்-

லியோனி அளித்த பேட்டி:

சின்னி ஜெயந்த்தும், ஹீரோ குணாலும் கல்லூரி காதல் சுகமானதா? சுமையானதா? என்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசுவார்கள். அப்போது ஹீரோ காதல் சுகமானது என்று பேசும்போது ஹீரோயினி இன்ஸ்பயர் ஆகி லவ் பண்ற மாதிரி காட்சி எடுத்தார்கள். நானும் ரொம்ப ஆசையாக நடித்துக் கொடுத்தேன். படம் ரிலீசான போது ரொம்ப ஆசையா போய் பார்த்தேன். ஆனால், நான் நடித்த காட்சி ஒன்று கூட வரவில்லை. என்னைக் கேட்காமலேயே என்னுடைய காட்சியை கட் பண்ணி விட்டார்கள். அதற்கு பிறகு சினிமா இப்படித்தான் இருக்கும் போல என நினைத்து நிறைய படங்களை தயக்கத்தோடு தவிர்த்து விட்டேன்.

dindigulleoni

சினிமா பட அனுபவம்:

பின் ரஜினி சாரின் சிவாஜி படத்தில் நடிக்க முதலில் எனக்கு தான் வாய்ப்பு வந்தது. அப்போ ஸ்கூலில் பிசியாக இருந்தேன். அந்த வாய்ப்பை தவற விட்டேன். இப்படி சினிமா என்கிற நல்ல மீடியாவை மிஸ் பண்ணிவிட்டேன். அதற்கு பின் பன்னி குட்டி படத்தில் வாய்ப்பு வந்தது. இயக்குனர் அனுசரணின் கிருமி படம் எனக்கு ரொம்ப பிடித்த படம். அவர் கேட்ட உடனே ஓகே சொல்லிவிட்டேன். என் திறமையை முழுசா வெளியே கொண்டு வருவார் என்ற நம்பிக்கை இருந்தது. அப்படியே கொண்டுவந்துள்ளார். படத்தில் சாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மேலும், அவரிடம் தி.மு.க மூடநம்பிக்கைகளை எதிர்த்துகொண்டிருக்கும்போது சாமியாராக நடித்துள்ளீர்களே? என்று கேள்வி கேட்கப்பட்டது.

சாமியார் கதாபாத்திரம் குறித்து சொன்னது:

அதற்கு பதில் அளித்த லியோனி சாமியார் கதாபாத்திரத்தில் நடிப்பது தவறில்லை. அதன் மூலம் என்ன சொல்ல வருகிறோம் என்பது தான் முக்கியம். விவேகானந்தரும் சாமியார், நித்யானந்தாவும் சாமியார் தான். இதில் விவேகானந்தரை வழிகாட்டியாக உலகம் முழுக்க கொண்டாடுகிறார்கள். நான் சாமியாராக வந்தாலும் மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடிய நல்ல சாமியாராக வருகிறேன். அடுத்ததாக கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ஆலம்பனா படத்தில் வைபவ் தாத்தாவாக படம் முழுக்க வருகிறேன். நல்ல வாய்ப்புகள், நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளேன் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement