சினிமா பட விழாக்களுக்கு நடிகைகள் வராதது குறித்து இயக்குனர் வெங்கடேஷ் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்வர் வெங்கடேஷ். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார் இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறார்.

மேலும், இவர் இயக்கிய சாக்லேட், பகவதி, வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது இவர் சிறிய இடைவெளிக்கு பிறகு தில் ராஜா என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய் சத்யா, ஷெரின், சம்யுக்தா, வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, கே பி ஒய் பாலா, கராத்தே ராஜா, ஞானசம்பந்தம் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
தில் ராஜா படம்:
இந்த படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்திருக்கிறார். கோல்டன் ஈகிள் ஸ்டுடியோ சார்பில் கோவை பாலசுப்பிரமணியம் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படம் வருகிற 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தினுடைய இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்திருந்தார்கள். ஆனால், படத்தின் கதாநாயகிகளான ஷெரின், சம்யுக்தா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் இயக்குனர்:
மேலும், விழாவில் இயக்குனர் வெங்கடேஷ், சமீப காலமாகவே நடிகைகள் தங்களுடைய படங்களின் ப்ரோமோஷன் விழாவிற்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் அதற்காக பணம் கேட்கிறார்கள். இது தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அந்த வரிசையில் என்னுடைய படத்தின் நடிகைகளான ஷெரின், சம்யுக்தா இருவரும் இந்த நிகழ்ச்சிக்கு வரவே இல்லை. நாங்கள் அவரிடம் பலமுறை போராடி பார்த்தோம். ஆனால், அவரகள் வேறு வேறு படப்பிடிப்பு இருக்கிறது வர முடியாது என்று மறுத்து விட்டார்கள்.
https://www.youtube.com/watch?v=MH2xFA2nAdM
நடிகைகள் குறித்து சொன்னது:
ஹீரோ விஜய் சத்யாவும், வனிதாவும் தான் நான் இயக்கிய படத்தினுடைய ஹீரோக்களை அழைக்க சொன்னார்கள். நான் இயக்கிய அப்போதைய அப்கம்மிங் நடிகர்களை அழைத்தேன். ஆனால், அவர்களுமே வரமாட்டார்கள் என்று எனக்கு தோன்றியிருந்தது. அதேபோல்தான் அவர்களும் வர மறுத்தார்கள். இந்த படம் குறுகிய காலத்திலேயே எடுத்து முடிக்கப்பட்டது. எந்த சூழல் வந்தாலும் அதை சாமர்த்தியமாக வெல்ல முடியும் என்பது தான் இந்த படத்தினுடைய கதை.

படம் குறித்து சொன்ன விஷயம்:
ட்ரைலரில் வனிதாவை காண்பிக்கவில்லை. காரணம், அவர் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரை திரையில் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து தான் நான் ட்ரைலரில் காண்பிக்கவில்லை. அதேபோல் இந்த படத்தின் இரண்டு ஹீரோயினிகளுமே இந்த விழாவிற்கு வந்திருந்தால் வனிதாவை இந்த விழாவுக்கு அழைத்திருக்க கூட மாட்டேன். ஆனால், அழைக்க வேண்டிய சூழல் வந்து விட்டது. இந்த படத்துக்காக நடிகர் விஜய் சத்யா ரொம்பவே உழைத்திருக்கிறார். என்னுடன் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி என்று கூறியிருக்கிறார்.






