குட் பேட் அக்லி படம் உருவான விதம் குறித்து இயக்குனர் ஆதி ரவிச்சந்திரன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த படம் ‘விடா முயற்சி’.

இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஜெரினா கஸான்ட்ரா, அர்ஜுன், ஆரவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பின் இந்த படம் வந்ததால் திரையரங்குகளில் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி இருந்தார்கள். அதோடு இந்த படம் மொத்தமாக 150 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது. தற்போது நடிகர் அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
குட் பேட் அக்லி படம்:
இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி வருகிறார். கடைசியாக இவர் இயக்கிய மார்க் ஆண்டனி படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருந்தது. அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய டீசர், ட்ரைலர் வெளியாகியிருந்தது.

ஆதித் ரவிச்சந்திரன் பேட்டி:
இந்த படத்தின் ரீலீசுக்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ஆதித் ரவிச்சந்திரன், நேர்கொண்ட பார்வை படத்தின் போது அஜித் சாருடன் எனக்கு பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அஜித் சார், நீயும் நானும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று சொன்னார். அதைக் கேட்டபோது எனக்கு ரொம்ப சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. காரணம், அதற்கு முன்பு வெளிவந்த என்னுடைய படம் தோல்வி பெற்றிருந்தது. அவர் எப்படி என்னை அந்த இடத்தில் வைத்து பார்த்தார் என்று தெரியவில்லை.

கதை உருவான விதம்:
அதன் பிறகு எல்லாமே ஓகே ஆகி நான், அஜித் சாருக்கு கதை சொல்லப் போனேன். அந்த நாளில் எனக்கு ரொம்ப பயமாக இருந்தது. இந்த கதை அஜித் சாருக்கு பிடிக்குமா? பிடிக்காதா? பிடிக்க வேண்டுமென்றால் என்ன பண்ணனும் என்றெல்லாம் என் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது. நான் சாமி எல்லாம் கும்பிட்டு விட்டு தான் அஜித் சாரிடம் கதை சொல்ல போனேன். என்னுடைய அம்மாவும் அஜித் சாருக்கு கதை பிடிக்க வேண்டும் என்று சாமி எல்லாம் கும்பிட்டுக் கொண்டிருந்தார். பொதுவாகவே நான் கொஞ்சம் சத்தமாக ஓப்பனாக கதை சொல்வேன். ஆனால், அஜித் சாரிடம் அப்படி சொல்ல முடியவில்லை. சாப்ட் ஆக தான் கதை சொன்னேன்.

அஜித் பற்றி சொன்னது:
அஜித் சார் படத்துக்கு ஓகே சொன்னவுடன் நான் வெளியே வந்து என்னுடைய அம்மாவுக்கு போன் செய்து சொன்னேன். அதைக் கேட்டவுடன் என்னுடைய அம்மா ரொம்பவே சந்தோஷப்பட்டு கண்ணீர் வடித்தார். கதை இதுதான் என்று முடிவு செய்த பிறகு யார் யார் படத்தில் நடிக்கிறார்கள் போன்ற விவரங்களை எல்லாம் டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்தோம். அன்று இரவே மைதிரி நிறுவனத்திற்கு கால் செய்து படத்தை கமிட் செய்து விட்டார். எல்லாவற்றையும் ஒரே இரவில் கடகடவென்று அஜித் சார் முடித்து விட்டார் என்று கூறியிருக்கிறார்.






