‘ராஜஸ்தான்ல ஸ்வட்டரா’ – மாஸ்டர் படத்தில் காதல் கோட்டை படம் குறித்து கேட்ட கேள்விக்கு இயக்குனர் கொடுத்த செம பதிலடி.

0
1718
mastar
- Advertisement -

மாஸ்டர் படத்தில் காதல் கோட்டை பட காட்சியை கேலி செய்ததாக எழுந்த சர்ச்சைக்கு அந்த படத்தின் இயக்குனர் அகத்தியனே விளக்கம் அளித்துள்ளார். இயக்குனர் அகத்தியின் இயக்கத்தில் அஜித் மற்றும் தேவையனி நடிப்பில் வெளியான காதல் கோட்டை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ஒரு காதல் சின்னமாக ஒரு ஸ்வட்டரை தான் பயன்படுத்தி இருப்பார் இயக்குனர் அகத்தியன். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் அஜித்திற்கு ஹீரோயின் ஸ்வட்டர் பரிசாக அளித்தது குறித்து மாஸ்டர் படத்தில் கேலியான ஒரு வசனம் இடம் பெற்றதாக சர்ச்சை எழுந்தது.

-விளம்பரம்-

விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையின் போது வெளியான மாஸ்டர் படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தில் நடிகர் விஜய் முதல் பாதியில் குடிக்கு அடிமையாகி இருப்பார். மேலும், ஏன் இப்படி குடிக்கிறீர்கள் என்று யாவராவது கேட்டால் அதற்கு ஒவ்வொரு முறையும் ஒரு காரணம் சொல்லுவார். ஒரு சமயம் கமல் நடித்த புன்னகை மன்னன் கதையையும், ஒரு சமயம் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் கதையையும் சொல்லும் விஜய் ஒரு சமயத்தில் அஜித் நடிப்பில் வெளியான காதல் கோட்டை படத்தின் கதையை சொல்லுவார்.

- Advertisement -

கமல், மற்றும் சூர்யா நடித்த படத்தின் கதைகளை சொல்லும் போதுவிட அஜித் நடித்த காதல் கோட்டை படத்தின் கதையை பற்றி விஜய் சொல்லும் போது நடிகை மாளவிகா ‘ராஜஸ்தானில் சொட்டாரா’ என்று கேட்பார். இதனால் இந்த காட்சியில் காதல் கோட்டை படத்தை கேலி செய்தது போல இருந்தது என்று பலரும் விமர்சித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற காதல் கோட்டை இயக்குனர் அகத்தியின் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

வீடியோவில் 9 : 30 நிமிடத்தில் பார்க்கவும்

ராஜஸ்தான் குளிர் மிகவும் கொடுமையான குளிர் அதை அங்கு போய் பார்த்தால் தான் புரியும் நான் காதல் கோட்டை படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக அங்கு சென்றபோது தான் இருந்தது அங்கே எவ்வளவு குளிர் என்று அதில் இருக்கும் அதேபோல காதல் கோட்டை படத்தில் வரும் கமலி ஊட்டியில் தான் இருப்பார். அதுவும் ஒரு குளிர் பகுதிதான். எனவே, ஏதாவது ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்றால் ஸ்வட்டர் தான் இயல்பாக இருக்கும். அதனால் ராஜஸ்தானின் ஸ்வட்டர் என்பது பெரிய தப்பு என்பதில் லாஜிக் இல்லை. அது தப்பு என்று அவர்கள் யோசித்தால் அது அவர்களுக்கு ஜாகரபி தெரியல்ன்னு அர்த்தம் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement