இயக்குனர் ஏ எல் விஜய் வீட்டில் நேர்ந்த இறப்பு – திரையுலகினர் அஞ்சலி.

0
259
ALVijay
- Advertisement -

இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் தாயார் காலமாகி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஏ எல் விஜய்யும் ஒருவர். மேலும் இவர் முன்னணி தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பனின் மகன் மற்றும் நடிகர் ஏ எல் உதயாவின் சகோதரரும் ஆவார். அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2007 ஆம் வெளியான ‘கிரீடம்’ படத்தின் மூலம் தான் அறிமுகமானவர் ஏ எல் விஜய்.

-விளம்பரம்-

அதன் பின்னர் “மதராசபட்டினம்’ , ‘தெய்வ திருமகள்’ , ‘தலைவா’ போன்ற வெற்றி படங்களை இயக்கி இருந்தார் இயக்குனர் ஏ எல் விஜய். மேலும், இவர் இயக்கிய ‘தெய்வ திருமகள், தலைவா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இவர்கள் இருவரும் 2014 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர். ஆனால், 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்தனர்.

- Advertisement -

இதையும் பாருங்க : காதல் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தம், மருத்துவமனையில் புலி – வீடியோவை கண்டு ஷாக்கான ரசிகர்கள்

ஏ எல் விஜய்யின் குடும்பம்:

இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் தான் இவர்கள் பிரிந்தனர் என்று கூறப்பட்டது. திருமணம் ஆகி மூன்று வருடங்கள் கூட ஆகாத நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதனை அடுத்து இயக்குனர் ஏ எல் விஜய் கடந்த 2019 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். பின் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. மேலும், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடைசியாக தலைவி படம் வெளியானது.

-விளம்பரம்-

தலைவி படம்:

மறைந்த நடிகையும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த படம் தலைவி. இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், அரவிந்த் சுவாமி, சமுத்திரகனி, நாசர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பள்ளிப்பருவம் முதல் தொடங்கி அரசியலில் நுழைந்தது பிறகு அவர் முதல்வராக பதவியேற்று நாட்டை ஆண்டது என அனைத்துமே இயக்குனர் அழகாக சொல்லி இருந்தார்.

ஏ எல் விஜய்யின் திரைப்பயணம்:

இந்த படம் திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது.
அதற்கு பின் ஏ எல் விஜய் இயக்கத்தில் எந்த படமும் வெளியாக இல்லை. இவரின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் ஏ எல் விஜய்யின் தாயார் இறந்து உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஏ எல் விஜய்யின் தாயார் இறப்பு:

அதாவது, ஏ எல் விஜய் மற்றும் ஏ எல் உதயாவின் தாயார், அழகப்பனின் மனைவியுமான வள்ளியம்மை இன்று காலை இயற்கை எய்தினார். அவருடைய மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இவர் எப்படி இறந்தார் என்ற தகவல் தெரியவில்லை. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement