தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக திகழும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பைசன். இந்த படத்தில் பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு நிவாஸ். கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன் இருவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். கபடி விளையாட்டை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

மேலும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் இயக்குனர் அமீர். இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் இயக்குனர் அமீர், நானும் விக்ரம் சாரும் ரொம்ப நல்ல நண்பர்கள். அவரும் இதைப் பற்றி வெளியில் சொன்னது கிடையாது. நானும் சொன்னது கிடையாது. முதல் முறையாக நான் பைசன் பட நிகழ்வில் தான் அதை சொல்ல வேண்டிய சூழல் வந்தது. விக்ரம் சாருடன் டின்னர் சாப்பிட்ட நினைவுகள் என்னுடைய பொண்ணு தான் எனக்கு ஞாபகம் படுத்தினார்.
அமீர் பேட்டி:
நான் முன்னாடியே விக்ரம் சாரை சந்திக்கும்போது, துருவ் ரொம்ப வித்தியாசமாக இருக்கான். இப்போவே வீடியோ எடுக்கணும். அது இதுன்னு வித்தியாசமாக பண்ணிட்டு இருக்கான் என்று சொன்னார். பிறகு துருவ் வெளிநாட்டுக்கு போய் படித்திட்டு வந்தார். அவரை அதற்குப் பிறகு சந்திக்கவே கிடையாது. அவர் நடித்த இரண்டு படங்களை நான் பார்த்தேன். பைசன் படப்பிடிப்பில் துருவைப் பார்த்தேன்.
https://www.youtube.com/watch?v=9Y_FUR456OM
விக்ரம் பற்றி சொன்னது:
அவர் விக்ரமோட ஒரு மினியேச்சர் மாதிரி தான் இருந்தார். நிறைய கஷ்டப்பட்டு நடிக்கிற நடிகர்கள் இங்கு இருக்கிறார்கள். விக்ரம் ஓட டெடிகேஷன் ஒரு படி மேலே. விக்ரம் போடும் உழைப்பை யாராலும் போட முடியாது. விக்ரம் கல்லூரியில் படிக்கும் போது அவருக்கு ஒரு பெரிய விபத்து நடந்தது. அவரால் முட்டி போட்டு உட்கார முடியாது. சேது படத்தில் அவர் தொடையில் தெரிகிற தழும்பு உண்மையானது தான். அவருக்கு நடந்த விபத்தில் ஏற்பட்ட காயம் தான் அது.

விக்ரம் உழைப்பு:
அப்படி ஜெயிக்கனும் என்ற ஒரு வெறி அவருக்கு இருந்தது. தன்னை ஏளனமாக பார்த்ததற்கு முன்னாடி ஜெயிக்கணும்னு ஒரு எண்ணம் அவருக்குள் எப்போது இருந்தது. சேது படத்தில் கதாநாயகனாக வருவதற்கு நான் ஒரு காரணமாக இருந்தேன். சேது படம் முதலில் பூஜை போட்டு டிராப்பானது. அதற்கு பிறகு தான் 1997 இல் தொடங்கப்பட்டது. 2000 ஆண்டில் முடிந்தது. அதற்கிடையில் பொருளாதார ரீதியான சவால்கள் அவருக்கு வந்தது. விக்ரம் சந்தித்த அத்தனை அவமானங்களும் எனக்கு தெரியும். அவருடைய நெருங்கிய நண்பர் நான் தான் என்று கூறியிருக்கிறார்.






