யார் இப்படி செய்தது. புகைப்படத்தை பகிர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன். என்ன கூறியுள்ளார் பாருங்க.

0
12748
lakshmiramakrishnan
- Advertisement -

கொரோனா வைரஸத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உலகமே ஆட்டம் கண்டு போய் இருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் வேதனையிலும் கவலையிலும் உள்ளார்கள். இந்தியாவில் கொரோனாவினால் 10000 பேருக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 300 க்கும் மேற்பட்டோர் பலியாகியும் உள்ளனர். இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அனைவரும் மாஸ்க் மற்றும் சானிடைசர் போன்றவற்றை உபயோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. இன்றுடன் ஊரடங்கு முடியவிருந்த நிலையில் தற்போது ஏப்ரில் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பாரத பிரதமர் மோடி அடிக்கடி மக்களுக்கு எதாவது ஒரு செயலை செய்ய அறிவுறுத்தி வருகிறார். கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி அன்று அனைவரின் வீட்டிலும் 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்து விளக்கு ஏற்ற வேண்டும் என்று மோடி கோரிக்கை வைத்தார். இதற்கு மக்களின் ஆதரவும் அதிகம் பெருகியது.

- Advertisement -

மேலும், மோடியின் செயல்களை கண்டு நாட்டு மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும், மோடியின் செயல்களை புகழும் வகையில் பல்வேறு மீம்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், சமீபத்தில் ராமருடன் மோடி இருப்பது போன்று இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு பிரபல நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில், இந்த படத்தை முகநூலில் பார்த்தேன், இதை யார் செய்தாலும்- அவர் மதச்சார்பற்ற இந்திய மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர். சாதி / மத வேறுபாடின்றி மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் பொறுப்பு உள்ளது. இந்த வகையான பிரச்சாரம் அருவருப்பானது. இதனிடையே நானும் ஒரு அனுமன் பக்தன் தான், ஆனால் இதை நான் ஊக்குவிக்க மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-

மற்றொரு பதிவில் தவறான செய்தியைக் கொடுக்கக்கூடிய எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம் என்று உங்களை தீவிரமாக பின்தொடர்பவர்களுக்கு அறிவுறுத்துமாறு நரேந்திர மோடியை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்களுக்கு ஒரு உண்மையான தலைவர் தேவை, அவர் மதச்சார்பற்றவர், ஒரு உண்மையான தலைவராக நாங்கள் கருதுகிறோம், அவர் இந்த கடினமான காலங்களில் எங்களுக்கு வழிகாட்டும் ஒரு நபராக பார்க்கிறோம் என்றும் கூறியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

Advertisement