பாலிவுட் சென்றதும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு மாறிய அட்லீ – இதோ அவரின் லேட்டஸ்ட் லுக்.

0
5086
atlee
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குனராக ஆனார் அட்லீ. இயக்குனர் அட்லி தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அட்லீ அவர்கள் கடந்த ஆண்டு மூன்றாவது முறையாக தளபதி விஜயை வைத்து பிகில் படத்தை இயக்கியிருந்தார். உலக அளவில் பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிகில் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனையும் செய்தது. விஜய்யின் பிகில் படத்திற்கு பிறகு இயக்குனர் அட்லி அவர்கள் ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து படம் இயக்க போவதாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வந்தது.

-விளம்பரம்-

அட்லியின் பிகில் படத்தின் டிரைலரை பார்த்து ஷாருக்கான் இணையங்களில் தன்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து இருந்தார். அதே போல கடந்த ஆண்டு நடைபெற்ற பிஎல் கிரிக்கெட் தொடரில் ஷாருக்கான்,அட்லீயும் ஒருத்தருக்கு ஒருத்தர் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அதற்கான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வைரலானது.

- Advertisement -

ஆனால், அட்லீ, ஷாரூக்கானுடம் இணைந்து படம் எடுக்கப்போகிறார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியவில்லை. தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் ‘பதான்’ படத்திற்கான பணிகளில் ஷாருக்கான் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், அட்லீ- ஷாருக்கான் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பதான் படத்தினை நிறைவு செய்த பின் அட்லீ படத்தில் நடிக்க ஷாருக்கான் தேதி ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது, இப்படத்திற்கான முதற்கட்டப் பணிகளை அட்லீ ஆரம்பித்துவிட்டதாகவும் படப்பிடிப்பு இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

அதே போல அட்லிக்கு இந்த படத்தில் 30 கோடி ரூபாய் சம்பளம் தருவதாக ஒப்பந்தம் செய்ய உள்ளதாகவும் கூறி இருந்தார்கள். இதுவரை தமிழ் திரைப்பட இயக்குனர்களில் சங்கர் தான் அதிக அளவு சம்பளம் வாங்குவார். மேலும், ஷாருக்கான் இவரது படத்தில் ஒப்பந்தம் செய்தால் சங்கரை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் திரைப்பட இயக்குனர்களில் அட்லீ தான் முதல் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement