இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக கதை திருட்டு பிரச்னையில் சிக்கியது. உதவி இயக்குனர் வருண் என்பவர் சர்கார் திரைப்படம் என்னுடைய கதை என்று கூற அதற்க்கு மிகவும் உறுதுணையாக இருந்தது நடிகரும் எழுத்தாளர் சங்க தலைவருமான பாக்யராஜ் தான்.
சர்கார் கதை திருட்டு விவகாரத்தில் பாக்யராஜ் மற்றும் எஸ் ஏ சிக்கு பனிபோர் நிலவி வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் இருவரும் சமீபத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அனைவரும் ஆண்களிதில் பேச பின்னர் முதலில் இயக்குநர் கே.பாக்யராஜை பேச அழைத்தனர்,ஆனால், அவர் முதலில் மறுத்துவிட்டார்.அதன் பின்னர் பேசிய எஸ் ஏ சி, நான் தமிழிலேயே பேசுகிறேன், அதுதான் எனக்கு வசதியாக இருக்கும்” என்றார். தொடர்ந்து அதே தி நகரில் அவர் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கி, கடின உழைப்பால் மட்டுமே இன்று இவ்வளவு வளர்ந்ததாகவும், இந்தப் புதிய ஊடகத் துறை பலருக்கு ஒரு படிக்கல்லாக இருக்கும் எனவும் பேசினார்.
இதன் பின்னர் பேசிய பாக்யராஜ், அனைவரும் ஆங்கிலத்தில் பேசியதால் நான் என்ன பேசுவது என்று அமைதியாக இருந்தேன், சந்திரசேகர் தமிழில் பேசி, நான் பேசுவதற்கு வழி செய்தார், அதன்பின் தான் தைரியமாக நான் மேடை ஏறினேன், இருந்தபோதும் சந்திரசேகர் போல கோட் சூட் போடும் தைரியம் எல்லாம் இன்னும் எனக்கு வரவில்லை” என்று நகைச்சுவையாகப் பேசினார்.