உண்மையான சூனா பானா தேங்கா திருட போய் செத்தாரு – கண்ணாத்தா இயக்குனரே சொன்ன சுவாரசிய கதை.

0
775
barathikannan
- Advertisement -

கடந்த காலங்களில் வெளியான பல சுவாமி திரைப்படங்களில் வரும் பாடல்கலைத்தான் கோவில் திருவிழாக்களுக்கும், பண்டிகை காலங்களிலும் பெரும்பாலும் ஒளிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இசைஞானி இளையராஜா இசையில், ஆர். பி. செளத்ரி தயாரிப்பில், இயக்குனர் பாரதி கண்ணன் இயக்கிய திரைப்படம் “கண்ணாத்தாள்”. ஏறக்குறைய தமிழ் நாட்டில் உள்ள பாதி மக்கள் இப்படத்தின் பாடல் , படம் அல்லது நகைச்சிவை என இதில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக பார்த்தோ கேட்டோ இருப்பார்கள். அந்தளவிற்கு 1998ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படமானது மக்கள் மத்தியில் மெகா ஹிட் அடித்திருந்தது.

-விளம்பரம்-

இப்படத்தில் கரண்,நீனா, வடிவேலு, மணிவண்ணன், இந்து, வாடிவுக்கரசி, டெல்லி கணேஷ், பாத்திமா பாபு என பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படமானது ஒரு சுவாமி திரைப்படம் என்பதினால் பல பாடல்கள் இடம் பெற்றிருந்தன. படத்தில் கதை ரசிகர்கள் ரசிக்கும் படியாக இருக்க இசைஞானி இளையராஜாவின் பாடல் இதற்க்கு மேலும் வலு சேர்த்தது. அதோடு இப்படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஓன்று வைகை புயல் வடிவேலுவின் காமெடி.

- Advertisement -

இப்படத்தின் நகைச்சுவைக்காக இப்படத்தின் மற்ற நடிகர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தினரோ அந்த அளவிற்கு காமெடி நடிகர் வடிவேலுவிற்க்கும் கொடுத்திருந்தனர். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட வடிவேலு தனக்கு கொடுக்கப்பட்ட “சுனா பானா” கதாபாத்திரத்தை மிகவும் திறமையாக நடித்திருந்தார். இந்த படம் வடிவேலு நடித்த முக்கியமான திரைப்படங்களில் ஓன்று எனக் கூறலாம். மேலும் இப்படத்தில் அவர் நடித்திருந்த காட்சிகள் இன்றும் மக்கள் மத்தியில் பிரபலமாகவே உள்ளது.

கண்ணாத்தாள் பட இயக்குனரான பாரதி கண்ணன் ஸ்ரீ பண்ணாரியம்மன், ராஜ ராஜேஸ்வரி, கரகாட்டக்காரி, வயசு பசங்க போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கடைசியாக 2018ல் பக்க என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம், எதிர்நிச்சல் போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கண்னாத்தாள் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டு காலம் ஆகிய நிலையில் இப்படத்தின் இயக்குனர் பாரதி கண்ணன் பிரபல பத்திரிகை ஒன்றிக்கு பேட்டியளித்திருந்தார்.அந்த பேட்டியின் போது தன்னுடைய திரைவாழ்க்கை பற்றி பல சுவாரசியமான விஷியங்களை பகிர்ந்து கொண்டார் இயக்குனர் பாரதி கண்ணன்.

மேலும் கண்ணாத்தாள் திரைப்படத்தை பற்றி பேசிய பாரதி கண்ணன் இப்படத்தில் வரும் “சுனா பானா” என்ற கதாபாத்திரம் உண்மையிலேயே ஒரு திருடர். அவர் என்னுடைய மாமாதான் அவருடைய கதாபாத்திரத்தில் தான் நடிகர் வடிவேலு நடித்திருந்தார. அந்த கதாபாத்தில் ஒன்றி மிகவும் தத்ருபமாக நடிகர் வடிவேலு நடித்திருந்தார் என பல ஆச்சிரியமூட்டும் விஷியன்களையும் அவர் அந்த பேட்டியில் பகிர்ந்திருந்தார்

Advertisement