தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் பாரதி கண்ணன். இவர் திருநெல்வேலி ,கண்ணத்தாள், பண்ணாரி அம்மன், வயசு பசங்க போன்ற பல வெற்றி படங்களை இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் சினிமா, சீரியல் என்று பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஒரு முக்கிய ரோலில் பாரதி கண்ணன் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கும் நிலையில் இவர் நடிகர் கார்த்தி தொடர்பாக அளித்த பேட்டி தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதாவது பேட்டியில் பாரதி கண்ணன், ஒரு முறை கார்த்தியை சந்தித்து 5 லட்சம் ரூபாய் அட்வான்சோட கதை சொல்லப் போயிருந்தேன். பணத்தை நான் கையில் தொடுவதில்லை. அப்பா போட்டோவில் வைத்து விடுங்கள் என்று கார்த்தி சொன்னார். அடுத்த சந்திப்பு ஊட்டியில் நடந்தது. அப்போது கார்த்திக் போன் செய்து, 5 லட்சம் ரூபாய் கிடைக்குமா? என்று கேட்டார்.
பாரதி கண்ணன் பேட்டி:
நானுமே அந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஊட்டிக்குப் போனேன். நாங்கள் கார்த்திக் தங்கி இருந்த இடத்தில் டேபிள் ஐந்து கிளாஸ்கள் இருந்தது. அத்தனை கிளாசையுமே ஒரே நேரத்தில் ஊற்றி குடித்தார். பிறகு கார்த்திக் கதையை மாற்ற சொன்னார். உடனே தயாரிப்பாளர் கார்த்திகை வைத்து படம் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆனால் கடைசிவரை அந்த 10 லட்சம் ரூபாயை கார்த்திக் கொடுக்கவில்லை. எங்களால் வாங்கவே முடியவில்லை என்று ஒரு கதையாகவே சொல்லியிருந்தார்.
https://www.youtube.com/watch?v=oOs-h1QQWAU
கார்த்திக் பற்றி சொன்னது:
இப்படி இவர் பேசியிருந்ததை பார்த்து சிலர், கார்த்திக் சினிமா துறையில் இருந்த போது செய்த சேட்டைகளை பற்றி எல்லாம் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே இருந்தார்கள். கடந்த சில வாரங்களாகவே கார்த்திக்- பாரதி கண்ணன் இடையே ஆன சர்ச்சை தான் சோசியல் மீடியாவில் தலைப்பு செய்தியாகவே இருந்தது. பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் பாரதி கண்ணன், எனக்கு ஒரு வருத்தமான மிரட்டல் தான் வந்திருக்கிறது. கார்த்திக் ரொம்ப திறமைசாலி, அவர் அசாத்தியமான நடிகர். அழகானவர். அந்த பேட்டியில் நான் நகைச்சுவையான சொன்ன விஷயங்கள் வேற மாதிரி வந்துவிட்டது.
View this post on Instagram
சர்ச்சைகளுக்கு விளக்கம்:
அந்த பேட்டியை பார்த்துவிட்டு திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோவில் சார்ந்த ரசிகர்கள் எல்லாம் எனக்கு போன் செய்து, இப்படி பேசிட்டீங்களே, இன்னுமும் நாங்கள் அவரை தெய்வமாக பார்க்கிறோம். இப்படி எல்லாம் பேசாதீர்கள் என்று ரொம்ப அமைதியாக மிரட்டினார்கள். அதேபோல் நடிகர் பிரபு, ராதாரவி எல்லாம் போன் செய்து நீங்களும் நடிகர். அவர் சாதனை படைத்த நடிகர். இப்படி எல்லாம் பேசி இருக்க வேண்டாம். இனிமேல் இப்படி பேச வேண்டாம் என்றெல்லாம் சொல்லியிருந்தார். பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒன்று. இப்போது அந்த வலி எல்லாம் கடந்த காலமாக கடந்து விட்டது என்று கூறி இருக்கிறார்.






