படம் ஓடவில்லை.! கடன் தொல்லை.! காஞ்சிபுரம் கோவிலில் பிச்சை எடுக்கும் பிரபல இயக்குனர்

0
2587
- Advertisement -

சினிமா துறை பொறுத்த வரை நடிகர்களை விட அதிகம் பாதிக்கபடுவது இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தான். அந்த வகையில் தமிழில் 25 படங்களுக்கு மேல் இயக்கிய இயக்குனர் ஒருவர் பண கஷ்ட்டத்தால் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளபட்டுள்ளார்.

-விளம்பரம்-

senthilnathan

- Advertisement -

நடிகர் விஜயகாந்த் நடிப்பில் 1988 ஆம் ஆண்டு வெளியான “பூந்தோட்ட காவல்காரன் ” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் செந்தில்நாதன். அதன் பின்னர் ராம்கி, அர்ஜுன், சரத் குமார் போன்ற ஹீரோக்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார்.

கடைசியாக 2009 ஆம் ஆண்டு வெளிவந்த “உன்னை நான்” என்ற படத்தை இயக்கிய செந்தில் அந்த படத்தை தயாரிக்கவும் செய்தார்.ஆனால், அந்த படம் மோசமான தோல்வியடைய கடன் தொல்லைக்கு ஆளானார் இயக்குனர் செந்தில். அதன் பின்னர் தொலைக்காட்சி தொடர்களை இயக்கி வந்த இவர், ஜெயா டிவி, ஜீ தமிழ், சன் டிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் சீரியல் தொடர்களை இயக்கி வந்தார்.

-விளம்பரம்-

director senthinathan

இறுதியாக சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி தொடரில் நடித்து வந்தார். பின்னர் சில பல காரணங்களால் அந்த தொடரில் இருந்து நீக்கபட்டார் இயக்குனர் செந்தில். அதைஎடுத்து என்ன செய்வதென்று அறியாத செந்தில் அதிக கடன் தொல்லையால் மனமுடைந்து பிச்சை எடுக்க சென்று விடலாம் என்று முடிவிடுத்துள்ளார்.

அதனால் காஞ்சிபுரத்தில் இருக்கும் ஒரு கோவிலில் பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த செந்திலின் நண்பர்கள் அவருக்கு அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விடரித்துள்ள போது, தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக செந்தில் கூறியுள்ளார்.

senthil

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்களான சில தயாரிப்பாளர்கள், செந்திலை கண்டுபிடித்து அவருக்கு பண உதவியை செய்யலாம் என்று முடிவெடுத்து அவரை தேடி காஞ்சிபுரத்திற்கு காரில் புறப்பட்டுள்ளனர். ஆனால், அவர் அங்கு இல்லாததால் தற்போது அவரை தேடி வருகின்றனர்.

Advertisement