அவர் மேல் தான் எனக்கு கோபமே – மீனா கணவரின் இறப்பு குறித்து மேடையில் கலங்கிய சேரன்

0
984
- Advertisement -

மீனா கணவரின் இறப்பு குறித்து சேரன் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தவர் சேரன். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் பல படங்களை இயக்கியும், நடித்தும் இருந்தார். அந்த வகையில் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டு இருந்தது. அதுமட்டும் இல்லாமல் வசூல் சாதனை பெற்று இருந்தது. பெரும்பாலும் இவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் வித்தியாசமாக இருப்பதால் இவருடைய படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கும்.

-விளம்பரம்-

மேலும், சேரன் அவர்கள் இயக்கிய பல படங்கள் தேசிய விருதுகளை வாங்கி இருக்கிறது. பின் இடையில் சில காலம் சேரன் படம் இயக்குவதில் இருந்து விலகி இருந்தார். பிறகு இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் சேரன் மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சேரன் இயக்கி நடித்த படம் ராஜாவுக்கு செக். இந்த படத்தில் சேரன் ஹீரோவாக நடித்து இருந்தார். இவருக்கு ஜோடியாக சராயூ மோகன் நடித்து இருந்தார் .

- Advertisement -

சேரன் திரைப்பயணம்:

இந்த படத்தில் நடிகர் இர்பான் வில்லனாக நடித்து இருந்தார். இந்த படம் எமோஷனல், திரில்லர், ஆக்ஷன், காமெடி என பல கலவைகளை கொண்டு இருந்தது. அதோடு இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் சேரன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு ‘. இந்த படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. குடும்பப் பாச கதையை மையமாக கொண்ட இந்த படம் ரசிர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

சேரன் அளித்த பேட்டி:

தற்போது சேரன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சேரன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் மீனா குறித்து கூறியிருந்தது, மீனாவுடைய பிறந்தநாள் என்னால் மறக்கவே முடியாது. காரணம், என்னுடைய பொற்காலம் படத்தின் படப்பிடிப்பின் போது அவருடைய பிறந்தநாள் வந்தது. அப்போது அந்த இடம் முழுக்க முழுக்க கருவேலங்காடு. அந்த இடத்தில் பிறந்தநாள் கொண்டாட எதுவுமே எங்களால் செய்ய முடியவில்லை.

-விளம்பரம்-

மீனா குறித்து சொன்னது:

இருந்தாலும் காட்டிற்குள்ளேயே பிறந்த நாளுக்கான ஏற்பாடுகளை செய்து கிரேனில் வைத்து பூக்களை தூவினோம். அதை மீனா எதிர் பார்க்கவே இல்லை .ரொம்ப சர்ப்ரைஸ் ஆனார். பின் பொக்கிஷம் படத்திற்கு பத்மப்ரியாவின் பின்னணி குரலுக்கு ஒரு கலைஞரை தேர்வு செய்த போது மீனா நினைவிற்கு வந்தார். ஆனால், மீனாவிற்கு இரண்டு நாட்களில் கல்யாணம். எப்படி கேட்பது என்று தயங்கிக் கொண்டே கேட்டோம். அவர் ஒத்துக்கொண்டார். ஒரே நாளில் வந்து பேசிக் கொடுத்து விட்டு சென்றார்.

மீனா கணவர் இறப்பு குறித்து சொன்னது:

மீனாவின் எல்லா சந்தோஷமான தருணங்களிலும் நான் இருந்து இருக்கிறேன். அப்படியே நான் அவரின் சோகமான நிகழ்விலும் இருந்திருக்கிறேன். மீனாவுக்கு இது நடந்திருக்கவே கூடாது. அவருடைய கணவர் அவரை விட்டு சென்றிருக்கக் கூடாது. இந்த சமயத்தில் தான் எனக்கு கடவுள் மீது கோபமும் கேள்வியும் வந்தது. ஏன் கடவுள் இப்படி செய்தார் என்று கேட்க தோன்றியது. மேலும், மீனாவுடன் பணியாற்றியது என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் என்று கூறி இருந்தார் .

Advertisement