இயக்குனர் சேரன் குடும்பத்தில் நேர்ந்த பேரிழப்பு – சொந்த ஊருக்கு விரைந்த சேரன்.

0
475
- Advertisement -

இயக்குனர் சேரன் வீட்டில் நிகழ்ந்திருக்கும் துக்க சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் சேரன். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் இருந்தார்.

-விளம்பரம்-

அதிலும் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டு இருந்தது.அதோடு சேரன் இயக்கிய பல படங்கள் தேசிய விருதுகளை வாங்கி இருக்கிறது. பின் இடையில் சில காலம் சேரன் படம் இயக்குவதில் இருந்து விலகி இருந்தார். பின் இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சேரன் படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

- Advertisement -

சேரன் திரைப்பயணம்:

அந்த வகையில் கடைசியாக இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான திருமணம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் அவர் நடித்தும் இருந்தார். இதனை அடுத்து கடந்த நான்கு ஆண்டுகளாக சேரன் எந்த படத்தையும் இயக்கவில்லை நடித்து மட்டும் வந்தார். அந்த வகையில் சமீபத்தில் சேரன் நடிப்பில் வெளிவந்த படம் தமிழ்க்குடிமகன். இந்த படத்தை இயக்குனர் இசக்கி கார்வண்ணன் இயக்கி இருக்கிறார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

சேரன்-கிச்சா கூட்டணி:

தற்போது மீண்டும் சேரன் அவர்கள் இயக்கத்தில் இறங்கி இருக்கிறார். இவர் கன்னட நடிகர் கிச்சா சுதிப்பை வைத்து தான் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் கிச்சா சுதிப் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தினுடைய அறிவிப்பை படக்குழு அறிவித்திருந்தார்கள். இந்த படத்திற்கு கிச்சா 47 என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படமும் கன்னடத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

சேரன் தந்தை மரணம்:

நீண்ட இடைவெளிக்கு பிறகு சேரன் இயக்கத்தில் படம் வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதை அடுத்து சேரன் வெப் தொடர் ஒன்றை இயக்கிக் கொண்டு பிஸியாக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சேரன் வீட்டில் நடந்திருக்கும் துக்க சம்பவம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சேரனுடைய தந்தை எஸ் பாண்டியன். இவர் தியேட்டரில் ஆப்பரேட்டராக பணியாற்றி இருந்தார்.

பிரபலங்கள் இரங்கல்:

இவருடைய சொந்த ஊர்வன பழையூர்பட்டியில் தான் பாண்டியன் வசித்து இருந்தார். சமீப காலமாகவே இவர் உடல்நல பிரச்சனையால் அவஸ்தை பட்டு இருந்தார். இன்று உடல்நிலை குறைவு காரணமாக சேரனின் தந்தை இறந்திருக்கிறார். இவருக்கு தற்போது 84 வயதாகிறது. இவருடைய மறைவால் சேரனுடைய ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் இருக்கிறது. மேலும், சேரனுக்கு திரை பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். இவருடைய இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Advertisement