தன்னுடைய உருவத்தை கேலி செய்தவர்களுக்கு கீர்த்தி சுரேஷ் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
கடந்த 2000ம் ஆண்டு வெளிவந்த பைலட்ஸ் என்ற மலையாள மொழி படத்தின் மூலம் தான் குழந்தை நட்சத்திரமாக கீர்த்தி சுரேஷ் அறிமுகம் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பிறகு கீர்த்தி சுரேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் திரைப்பயணம்:
மேலும், பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. அதோடு இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கூட வழங்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்கள்:
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதன் பின் இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் என்ற படத்தில் நடித்து இருந்தார். இப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது இவருடைய நடிப்பில் சைரன் என்ற படம் வெளியாகி இருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் பதிவு:
அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் தான் சைரன். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். சமுத்திரகனி, யோகி பாபு, அனுபமா பரமேஸ்வரன் உட்பட பலர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் திரையுலகில் நுழைந்து பத்து வருடங்கள் நிறைவு பெற்றிருக்கிறது. இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், நான் சினிமாவுலகில் நுழைந்து பத்து ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறேன்.
திரை பயணம் குறித்து சொன்னது:
இதை நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய அப்பா, அம்மாவிற்கு நன்றி. அவர்கள் இல்லை என்றால் நான் இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன். என்னுடைய குரு பிரியதர்ஷனுக்கு நான் என்றைக்கும் கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய திரை உலக பயணம் தொடங்குவதற்கு அவர்தான் காரணம். 10 ஆண்டுகள் நிறைவு செய்தாலும் இப்போதுதான் தொடங்கி இருப்பது போல இருக்கிறது. இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. என்னுடைய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், சக நடிகர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் மிக மிகப் பெரிய நன்றி. அது மட்டும் இல்லாமல் என்னை ட்ரோல் செய்தவர்களுக்கும் நன்றி. அவர்களுடைய விமர்சனங்களும் என்னுடைய வளர்ச்சிக்கு உதவுகிறது என்று கூறியிருக்கிறார். மேலும், இவர் இப்படி சொன்னதற்கு காரணம் இவரின் பழைய புகைப்படத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து இருந்தார்கள்.