நடிகர் சோ அறிமுகமான முதல் படமே மாபெரும் வெற்றி தான் – எந்த படம் தெரியுமா ? அதோட வசூல் இன்றைய நிலையில் இத்தனை கோடி.

0
470
cho
- Advertisement -

நடிகர் சோ அறிமுகமான முதல் படமே அபாரமான வெற்றியை பெற்று தந்திருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 60, 70 காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் சோ ராமசாமி. இவரை அனைவரும் சோ என்று தான் அழைப்பார்கள். இவர் நடிகர் மட்டுமில்லாமல் பத்திரிக்கையாசிரியர், நாடகாசிரியர், இயக்குனர், வக்கீல், அரசியல்வாதி என பன்முகத் தன்மை கொண்டவர். ராமசாமி சென்னையில் பிறந்தவர். இவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சட்ட ஆலோசகரானார். பின் 1957 ஆம் ஆண்டு நாடகங்களில் கதை எழுத துவங்கினார். அப்படியே மேடை நாடகங்களில் நடிக்கவும் துவங்கினார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 16 படங்களுக்கு கதையும் எழுதி இருக்கிறார். நான்கு திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் 4 தொலைக்காட்சி தொடர்களை எழுதி இயக்கி நடித்தும் இருந்தார். பெரும்பாலும் இவர் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறார். மேலும், இவர் அரசியல் வார பத்திரிகையின் நிருபர் மற்றும் ஆசிரியரும் ஆவார். இந்நிலையில் நடிகர் சோ அறிமுகமான முதல் படமே அபாரமான வெற்றியை பெற்று தந்திருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சோ நடித்த முதல் படம் பார் மகளே பார்.

- Advertisement -

இதையும் பாருங்க : ‘படத்த தியேட்டர்லதா பாக்க போனேன், ஆனா’ – விக்ரம் படத்தை ஏன் OTTயில் பார்த்தீர்கள் என்று கேட்ட ரசிகருக்கு பிரேமம் இயக்குனரின் செம பதில்.

சோ நடித்த முதல் படம்:

பெற்றால்தான் பிள்ளையா என்ற நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் தான் பார் மகளே பார். பெற்றால் தான் பிள்ளையா நாடகம் கூட ஒரு இந்திப் படத்தின் தழுவல் தான். சினிமா கதைப்படி சிவாஜி பெரிய ஜமீன்தார். அவருடைய மனைவி சவுகார்ஜானகி. பல வருடங்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறக்கிறது. கூடவே ஒரு குழந்தையும் வந்து சேர்கிறது. இரண்டில் எது தன் குழந்தை என அறியாமல் இரண்டையும் வளர்க்கிறார் சௌகார் ஜானகி. இந்த உண்மை சிவாஜிக்கு தெரியாது. படத்தில் சிவாஜி திமிர் பிடித்த பணக்கார ஜமீன் தார் வேடத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

பார் மகளே பார் படம் குறித்த தகவல்:

சிவாஜியின் நடிப்பு பற்றி சொல்லவே தேவை இல்லை. நவரசங்களையும் பிழிந்து இருக்கிறார். இதில் என்ன ஒரு மாற்றம் என்றால், நாடகத்தில் இரு ஆண் குழந்தைகளாக இருந்தது. படத்திற்காக பெண் குழந்தைகளாக மாற்றிவிட்டார்கள். இதனால் நாடகத்தில் ஆண்பிள்ளையாக நடித்த ஒய்.ஜி மகேந்திரனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு பதில் விஜயகுமாரி நடித்திருந்தார். இன்னொருவர் புஷ்பலதா. மேலும், பெற்றால் தான் பிள்ளையா நாடகத்தில் மெக்கானிக் மாடசாமி என்ற கதாபாத்திரத்தில் சோ நடித்திருந்தார். அப்படியே பார் மகளே பார் படத்தில் அவரே அதே கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

படம் பற்றிய பிற தகவல்:

இந்த படத்தின் மூலம் தான் சோ ராமசாமி சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், பொதுவாக வில்லன் வேடத்தில் நடிக்கும் எம் ஆர் ராதா இந்த படத்தில் நடன ஆசிரியராக நல்லவராக நடித்திருந்தார். எம்எஸ்வி இசையில் இடம்பெற்ற 10 பாடல்களையும் கண்ணதாசன் எழுதி இருந்தார். பாடல்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. படம் வெளியாகி பத்திரிகையாளர்களும் பாராட்டி விமர்சனங்கள் எழுதி இருந்தார்கள்.

படத்தின் வசூல்:

குறிப்பாக சிவாஜியின் நடிப்பை புகழ்ந்து தள்ளி இருந்தார்கள். மமதை, வெறுப்பு, கோபம், துயரம், அன்பு, வேதனை என எல்லாத்தையுமே சரியான இடத்தில் காண்பித்து இருப்பார் சிவாஜி. இந்த படத்தை கஸ்தூரி பிலிம்ஸ் வி.சி சுப்புராமன் தயாரித்திருந்தார். படத்தின் தமிழக உரிமையை சிவாஜியின் சிவாஜி பிலிம்ஸ் வாங்கி விநியோகித்து இருந்தது. இதில் இவர்களுக்கு அன்றைய மதிப்பில் இருபத்தி ஒரு லட்சம் ரூபாய் கிடைத்தது. இன்று அதன் மதிப்பு 20 கோடிகளுக்கு மேல் வரும். படம் எல்லா இடங்களிலுமே நல்ல வரவேற்பு பெற்று மிகப்பெரிய வெற்றியடைந்தது. சோ நடித்த முதல் படமே மிகப்பெரிய வெற்றி அடைந்து இருந்தது.

Advertisement