‘படத்த தியேட்டர்லதா பாக்க போனேன், ஆனா’ – விக்ரம் படத்தை ஏன் OTTயில் பார்த்தீர்கள் என்று கேட்ட ரசிகருக்கு பிரேமம் இயக்குனரின் செம பதில்.

0
237
alphonse
- Advertisement -

சமீபத்தில் கமலின் விக்ரம் படத்தை பாராட்டி பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பாராட்டி போட்ட பதிவு தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், கமலை வைத்து விக்ரம் படத்தி இயக்கி இருந்தார். கமல், விஜய் சேதுபதி, பஹத் பாஸில், சூர்யா என்று பலர் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றியடைந்து இருக்கிறது.

-விளம்பரம்-

விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரப்பு மாஸாக இருக்கிறது.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜுக்கு 80 லட்சம் மதிப்பில் கார் ஒன்றை பரிசளித்து இருந்தார் கமல். அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜுன் 13 உதவி இயக்குனர்களுக்கு பைக்கும், சூர்யாவிற்கு தன்னுடைய 40 லட்சம் பாதிப்புள்ள ஒரு rolex கைக்கடிகாராத்தையும் பரிசாக கொடுத்து இருந்தார் கமல்.

- Advertisement -

இதையும் பாருங்க : குருதிப்புனல் படத்தில் வந்த இவர் யார் தெரியுமா ? – இன்று தென்னிந்திய சினிமாவில் முக்கிய பிரபலமே இவர்தான்.

ஹாட் ஸ்டாரில் வெளியான விக்ரம் :

ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்தினை பதிவு செய்து வருகின்றனர். தற்போது பல திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுகொண்டு இருக்கும் இந்த படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருந்தது. திரையரங்கில் விக்ரம் படத்தை பார்க்காத பல்வேறு பிரபலங்கள் ஹாட் ஸ்டாரில் இந்த படத்தை பார்த்திவிட்டு இந்த படத்தை பாராட்டி பதிவுகளை போட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

பிரேமம் இயக்குனர் போட்ட பதிவு :

அந்த வகையில் இந்த படத்தை பார்த்துவிட்டு பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் ‘”ஏஜென்ட் டினா, ஏஜென்ட் உப்புலியப்பன், ஏஜென்ட் விக்ரம் மூவரையும் எனக்குப் பிடித்திருந்தது. சந்தானம் கதாபாத்திரம் தானோஸுக்கு சமமாக பிரமாண்டமாகவும் வலிமையாகவும் இருந்தது (நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் சேதுபதியை சந்தானமாக நான் விரும்பினேன்). ரோலக்ஸ் வெறித்தனம்.

ரசிகர் கேட்ட கேள்வி :

இறுதிக் காட்சியில் ஏஜென்ட் விக்ரமின் அவதார் புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தது. ஏஜென்ட் விக்ரம் உருவாக்கிய முழு கதைக்களத்தையும் புரிந்து கொள்ள அமர் உதவுகிறார். ACP பிரபஞ்சன் நேர்த்தியாக இருந்தார். காவல்துறைத் தலைவர் ஜோஸ் தனக்குத் தேவையான தாக்கத்தை உருவாக்குகிறார். விக்ரமின் நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு மரியாதை மற்றும் அன்பு’ என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு லோகேஷ் கனகராஜும் நன்றி தெரிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் ரசிகர் ஒருவர் ‘இந்த படத்தை தியேட்டரில் பார்க்காமல் ஏன் OTTயில் பார்த்தீர்கள்’ என்று கேள்வி எழுப்பினார்.

அல்போன்ஸ் கொடுத்த பதில் :

இதற்கு பதில் அளித்த அல்போன்ஸ் புத்திரன் ‘காரணம், நான் திரையரங்கில் படம் பார்க்கச் செல்லும்போது, ​​என்னுள் இருக்கும் எடிட்டர் நான் என் வேலையை முடிக்கவில்லை என்று சொல்கிறார். பிறகு எடிட்டிங்கை முடித்ததும்.. படம் பாதியிலேயே நிறைவடைந்துவிட்டது என்று எனக்குள் இருக்கும் இயக்குனர் சொல்கிறார்.. அதனால் இயக்குனர் திரும்பி வந்து வேலையை முடித்ததும்.. என்னுள் இருக்கும் கலர் கரெக்டர் எழுந்து நான் வேண்டும் என்று சொல்கிறார்.

OTT இல் பார்த்த காரணம் :

கலர் கரெக்டரில் செல்லும் வழியில்.. எடிட்டர் தாமதம் இருப்பதாக உணர்ந்து காலவரிசையை சரிசெய்கிறார். இப்போது என்னில் உள்ள கலர் கிரேடர் எடிட் செய்யப்பட்ட நேரத்தை சரி செய்ய அமர்ந்திருக்கிறார். இப்போது எடிட்டிங் மோசமாக இருக்கிறது என்று என்னில் இருக்கும் இயக்குனர் சொல்ல மாட்டார். இப்போது, என்னில் உள்ள ஆசிரியர் காலவரிசையை சரி செய்து அகங்காரமாக உணர்கிறார். எனவே இறுதியாக ஒரு நபராக நான் OTT இல் விக்ரமைப் பார்ப்பேன் என்று முடிவு செய்தேன்’ என்று பதில் அளித்துள்ளார்.

Advertisement