இந்த சமயத்தில் உடற்பயிற்சி வீடியோ தேவையா? வெளுத்து வாங்கிய இயக்குனர். வரவேற்ற மாஸ்டர் பட பிரபலம்.

0
2558
ramyasanthanu
- Advertisement -

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதிக காய்ச்சல், அதிக இருமல், மூச்சுத்திணறல் இவையெல்லாம் தான் கொரோனா வைரஸின் அறிகுறிகளாக சொல்லப்படுகிறது. முதன் முதலாக இந்த கொரோனா வைரஸ் சீனாவில் தான் பரவ தொடங்கியது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. தற்போது இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது தான்.

-விளம்பரம்-

சமீபத்தில் கேரளாவில் முதல் பலி பதிவாகியுளளது. இதனால் பலி என்னிக்கை 20ஆக அதிகரித்துளளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக் கூடாது என்று பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மக்கள் அனைவரும் வீட்டின் உள் இருப்பதால் எப்படி பொழுதுபோக்குவது என்று யோசித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : எனது பிறந்தநாளன்று வாழ்த்து செல்லிவிட்டு இறந்த சேது. நண்பரின் நெகிழ்ச்சி பதிவு.

- Advertisement -

வீட்டில் இருப்பதால் தனிமை போர் அடிக்காமல் இருப்பதற்காக அனைவரும் புத்தகங்கள் படிப்பது, பெயிண்டிங் பண்ணுவது, பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது, சமைப்பது மற்றும் சின்ன சின்ன வீட்டு வேலைகளை செய்வது என்று பல விஷயங்களை செய்து வருகிறார்கள். மேலும், சில பிரபலங்கள் சிலர் உடற்பயிற்சிகளை செய்து அந்த விடீயோக்களை சமூக வளைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இப்படி பிரபலங்கள் உடற் பயிற்சிகளை பதிவிட்டு வருவதை கண்டு பிரபல பாலிவுட் பெண் இயக்குனர் பரா கான் கடுப்பாகி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்து பிரபலங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள் தயவு செய்து உடற்பயிற்சி செய்து வீடியோவை பதிவிடுவதை நிறுத்துங்கள். உங்கள் அனைவருக்குமே அனைத்து விதமான வசதிகளும் இருக்கிறது. அதே போல உங்களுக்கு உங்கள் உடல் நன்றாக இருந்தால் போதுமே தவிர இந்த உலகத்தில் தற்போது நடந்து வரும் கடுமையான சூழல் குறித்து உங்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை என்பது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

-விளம்பரம்-

ஆனால், எங்களில் சிலருக்கு தற்போது நடைபெற்று வரும் நிலைமை குறித்து மிகுந்த கவலை இருந்து வருகிறது அதனால் எங்கள் மீது இரக்கம் காட்டி உங்களின் உடற்பயிற்சி வீடியோக்களை பதிவு இடுவதை நிறுத்துங்கள் உங்களால் நிறுத்த முடியவில்லை என்றால் நான் உங்களை பின்தொடர்வதை நிறுத்திவிடுவேன் இதனால் நீங்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார். பரா கானின் இந்த விடீயோவிற்கு ஆடை படத்தின் இயக்குனர் ரத்னகுமார் வரவேற்பு தெரிவித்துள்ளார் மேலும் இறுதியாக என்னுடைய எண்ணத்தை ஒருவர் பேசி விட்டார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் ரத்னகுமார்.

இந்தியாவை பொருத்த வரை இதுவரை இதுவரை 873 பேர் இந்த நோயினால் பாதிக்கப்ட்டுள்ளார்கள். அதில் 775 சிகிச்சை பெற்று வரும் நிலையில் 78 பேர் இந்த நோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் இந்த கொடிய நோயினால் 19 பேர் உயிரிழந்துள்ளார்கள். தமிழகத்தில் பொறுத்தவரை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 35ஐ தாண்டியுள்ளது. ஏற்கெனவே கொரோனா தொற்றுடன் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம், மொத்தமாக 9 பேருக்கு தொற்று பரவியிருப்பதும் தெரியவந்துள்ளது.

Advertisement