எனது பிறந்தநாளன்று வாழ்த்து செல்லிவிட்டு இறந்த சேது. நண்பரின் நெகிழ்ச்சி பதிவு.

0
8258
sethuraman
- Advertisement -

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக நடிகரும் மருத்துவருமான சேதுராமன், திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரை துறை பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சேதுராமன். சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் சந்தானத்தின் மூலம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பின்னர் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் சேது ராமன்.

-விளம்பரம்-

நடிகரும் மருத்துவருமான சேது ராமன். கடந்த வியாழக்கிழமை (மார்ச் 26) இரவு 8.45 மணிக்கு மாரடைப்பால் காலமாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது . கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி உமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஹானா என்ற பெண் குழந்தையும் இருக்கிறார்.

இதையும் பாருங்க : தனிமைபடுத்தப்பட்ட கமல், ஒட்டப்பட்ட ஸ்டிக்கர். மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை.

- Advertisement -

மேலும், சேதுராமனுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு முதுகெலும்பில் ஒரு அறுவை சிகிச்சையும் செய்யப் பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சரும நிபுணரான சேதுராமன் வெறும் மருத்துவராக மட்டும் இல்லாமல் அடிக்கடி மக்களுக்கு தேவையான சில மருத்துவ அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். இவரது சமூக வலைதளப் பக்கத்தில் மக்களுக்கு பயனுள்ள பல்வேறு மருத்துவ குறிப்புகளையும் அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறார்.

சேதுராமனின் இறப்பிற்கு பல்வேறு திரை துறை நண்பர்கள் இரங்கல் தெரிவித்தனர். மேலும், சேதுராமனின் நண்பரான சந்தானம், சேதுவின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு சேதுராமனின் உடலை சென்றார். மேலும், சேதுராமனின் இறப்பு குறித்து பிரபல மருத்துவரும் சேதுராமனின் நண்பருமான அஸ்வின் விஜய் பதிவு ஒன்றை செய்துள்ளார்.

-விளம்பரம்-

அதில், “இதுதான் நாங்கள் இறுதியாக எடுத்துக்கொண்ட புகைப்படம். நான் இன்னும் சில புகைப்படங்கள் எடுத்து இருக்க வேண்டும். இதுவரை எனது பிறந்தநாளை நான் ஒருபோதும் ஊடகங்களில் வெளி உலகிற்கு அறிவித்தது இல்லை. ஆனால் மார்ச் 26 தான் என்னுடைய பிறந்தநாள், அந்த நாள் எங்களை விட்டுச் சென்ற நாளாக வலி மிகுந்த நாளாக மாறிவிட்டது.

இதையும் பாருங்க : உரடங்கின் போது தாசில்தார் என்று தெரியாமல் வெளுத்து வாங்கிய போலீஸ். வைரலாகும் வீடியோ

எனது பிறந்தநாளில் நான் பதில் அளித்த முதல் தொலைபேசி அழைப்பும் உங்களுடையது தான், நீங்கள் பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் போது, மச்சான் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த வருடம் வெட்டுவதற்கு என்னிடம் பிரெட் மட்டுமே இருக்கிறது என்று நகைச்சுவையாக கூறினாய். ஆனால், அதுவே கடைசி அழைப்பாக இருக்கும் என்பதை நான் உணரவில்லை. இனி வர இருக்கும் ஒவ்வொரு மார்ச் 26 எவ்வாறு இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கிறேன்” என உருகத்துடன் பதிவிட்டுள்ளார் அஸ்வின் விஜய்.

Advertisement