கோலமாவு கோகிலா, டாக்டர் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் நெல்சன் தமிழ் ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய இயக்குநராக மாறினார். கோலமாவு கோகிலா நயன்தாரா யோகிபாபு ஆகியோர் நடிப்பில் வெளியானது. போதைப்பொருள் கடத்தலை மிக வித்தியாசமாக கூறி இருந்த இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி அமைத்த நெல்சன் டாக்டர் என்ற சூப்பர் ஹிட் வெற்றி படத்தை இயக்கிய இந்த முறை பெண்கள் கடத்தலை மையமாக வைத்து எடுத்து நெல்சன் இதிலும் வெற்றி பெற்றார்.
கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என இரண்டும் மாபெரும் வெற்றிபெற்ற சூழலில் அடுத்து யாரை வைத்து இயக்குவார் என ஒட்டுமொத்த திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள விஜய்யை நெல்சன் இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தனர்.
விமர்சனங்களுக்கு உள்ளான பீஸ்ட் :-
விஜய் தயங்குவதன் காரணம் தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் அவருக்கு பெரிய மார்க்கெட்டை உண்டாகி வருகிறது.அந்த வகையில் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் என்னதான் விமர்சனங்களை சந்தித்தாலும், அப்படம் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.
பெரும் எதிர்பார்புகளுடன் வாரிசு :-
அப்படத்தை தொடர்ந்து விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.வாரிசு திரைப்படத்திற்கான நான்காம் கட்டப்படி பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தில் விஜயின் கதாபாத்திரத்திற்கு விஜய் ராஜேந்திரன் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மென் பொறியாளராக (Software and Application Developer ) நடிக்கிறார்.
விஜயின் நிஜப் பெயரையே படத்தில் இடம்பெறும் கதாபாத்திரத்திற்கு வைத்துள்ளனர்.இப்படம் அடுத்தாண்டு பொங்கலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இரண்டு ஜாம்பவான்கள் இனைகிறார்கள் :-
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் சிறந்த முன்னணி நடிகர்களாக திகழ்பவர்கள் விஜய் மற்றும் மகேஷ் பாபு. இந்த இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது, அதுமட்டுமல்லாது இந்த இரண்டு பெரிய நட்சத்திரங்களும் நல்ல நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் இந்த இருவரும் ஒரே படத்தில் இணைந்தால் எவ்வளவு கொண்டாட்டமாக இருக்கும். அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தற்போது விஜய் ‘வாரிசு’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார், அந்த படத்தில் தான் தெலுங்கு பிரபலம் மகேஷ் பாபுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது
சாங்ஸ், ஹீரோயின் இல்லமால் படம் எடுத்தால் என்ன ? விமர்சனங்களுக்கு உள்ளான விஜய் :-
இந்நிலையில் நடிகர் விஜய்யின் திரைபயணத்தில் முக்கிய இயக்குநராக பார்க்கப்படுப்பவர் இயக்குநர் ஃபாசில், இவர் இயக்கத்தில் விஜய் காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும் இயக்குநர் ஃபாசில் விஜய் அவரிடம் பகிர்ந்துக் கொண்ட விஷயம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது விஜய்க்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தும் திரைப்படங்களில் நடிக்க ஆசை. ஆனால் அவர் தனது ரசிகர்களுக்கு பயந்தே அது போன்ற திரைப்படங்களில் நடிக்க முன்வருவது இல்லை, என்னென்றால் அவரின் ரசிகர்களுக்கு டான்ஸ் மற்றும் பைட் இல்லாமல் படம் பிடிக்காது என்பதற்காக என இயக்குநர் ஃபாசில் தெரிவித்துள்ளார்.