அன்று சுசீந்திரன் மீது பாலியல் வழக்கு, இன்று சர்ச்சைக்குரிய காளி போஸ்டர் – பெண் இயக்குனருக்கு வலுக்கும் கண்டனம். அவரின் விளக்கம் இதோ.

0
795
leena
- Advertisement -

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் மிகவும் சொற்பமே, அந்த வகையில் `செங்கடல்’, `மாடத்தி’ போன்ற படங்களின் மூலம் கவனிக்கப்பட்டவர் லீனா மணிமேகலை. தற்போது இவர் இயக்கி இருக்கும் காளி என்ற டாக்குமென்ரி படத்தின் போஸ்டர் தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. அந்த போஸ்டரில் காளி கெட்டப்பில் இருக்கும் ஒரு பெண் வாயில் சிகெரேட்டுடன் இருப்பதை கண்டு இந்த போஸ்டருக்கு பல எதிர்புகள் கிளம்பி இருக்கிறது. இதை தொடர்ந்து சமூக வலைதளத்தில் பலரும் `arrest leena manimekalai என்ற ஹேஷ் டேக்கை போட்டு அவரை கைது செய்ய வேண்டும் என்று கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள லீனா ‘ காளி டோரோண்டோ நகரத்தில வலம் வந்தா என்ன நடக்கும்னு செய்து பார்த்தது தான் என்னுடைய `காளி’ படம்.ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப் பார்த்தா `arrest leena manimekalai’ ஹேஷ்டேக் பதிவிடாம `love you leena manimekalai’ ஹேஷ்டேக் பதிவிடுவாங்க. அவ்வளவு இன வேற்றுமைகளுக்கு மத்தியிலும் வெறுப்பை தேர்ந்தெடுக்காம நேசத்தை தேர்ந்தெடுக்கிறதைப் பற்றிப் பேசறா இந்தக் காளி. இன்னும் பேசுவாள்.’ என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க : அன்று சுசீந்திரன் மீது பாலியல் வழக்கு, இன்று சர்ச்சைக்குரிய காளி போஸ்டர் – பெண் இயக்குனருக்கு வலுக்கும் கண்டனம். அவரின் விளக்கம் இதோ.

இறுதியாக இயக்கிய படம் :

லீனா மணிமேகலை இறுதியாக மாடத்தி என்ற படத்தை இயக்கி இருந்தார். கடந்த மாதங்களுக்கு முன்னர்ட் தான் வெளியான மாடத்தி திரைப்படம் பெருமாலினோர் தவறவிட்ட ஒரு தரமான படம் என்று தான் சொல்ல வேண்டும். நீஸ்ட்ரீம் எனும் ஒடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகி இருக்கிறது. ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள மாடத்தி விமர்சகர்களிடையே ஓரளவு நல்ல வரவேற்பையும் பெற்று இருந்தது. 

-விளம்பரம்-

கவனத்தை ஈர்த்த மாடத்தி :

திருநெல்வேலியைச் சுற்றி இருக்கும் 30 கிராமங்களில் வாழும் புதிரை வண்ணார் மக்களைச் சந்தித்து, உரையாடி படத்துக்கான கருவை அந்த மக்களிடமே பெற்று இருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் லீனா மணிமேகலை பெற்றிருக்கிறார். சுயாதீன திரைப்பட இயக்குநரான இவர் கிரவுட் ஃப்ண்டிங் மூலம் குறைந்த தொகையை ஈட்டி சொந்த தயாரிப்பில் படத்தை உருவக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுசீந்திரன் மீது பாலியல் வழக்கு :

இயக்குனர் லீனா மணிமேகலை ஏற்கனவே இயக்குனர் சுசீந்திரன் மீது பாலியல் வழக்கு தொடர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. காரில் ஏறி பாலியல் ரீதியாக சுசிகணேசன் தொந்தரவு கொடுத்தார் என்று லீனா சுசிகணேசன் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார் சுசிகணேசன். இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக வழக்கு விசாரணையை லீனா மணிமேகலை இழுத்தடித்து வருவதாக சுசி கணேசன் தரப்பில் வாதாடப்பட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவு :

மேலும் வழக்கை தாமதப்படுத்தும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.நான்கு மாதத்தில் வழக்கை முடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவும் சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து லீனா மணிமேகலை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மாஜிஸ்திரேட்டிற்கு எதிராக கூறி வழக்க மாற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளதாக அவரது வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளுபடி செய்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டு இருந்தார்.

Advertisement