விஜய் கமலை தொடர்ந்து அஜித்துடன் கூட்டணி – லோக்கியின் அடுத்த சம்பவம். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.

0
479
ajith
- Advertisement -

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் லோகேஷ். அதன் பின் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திக்கை வைத்து இயக்கிய கைதி திரைப்படம் வெளியானது. அப்படத்தின் வெற்றி அவரை அடுத்தகட்டத்துக்கு அழைத்து சென்றது. மேலும் கைதி படத்தின் வெற்றியின் மூலம் அவருக்கு தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் மற்றும் லோகேஷ் இணைந்த மாஸ்டர் படமும் கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்தார் லோகேஷ்.

-விளம்பரம்-
lokesh


இந்நிலையில் சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்தியளவில் பிரபலமான இயக்குனராக மாறியுள்ளார்.லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் மற்றும் கைதி போன்ற திரைப்படங்கள் கமர்ஷியல் படங்களுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்பட்டதாக இருந்தன. பாடல்கள், நாயகி இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான முயற்சியில் உருவான மாநகரம் மற்றும் கைதி திரைப்படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றன.

- Advertisement -

தளபதி 67 :

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யின் 67-வது படத்தை இயக்கவுள்ளார். தற்போது அவர் அதன் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று பெயரிடப்பட்டுள்ளது, இதன் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இணையும் இரண்டாவது படமாக இந்தப் படம் இருக்கும். விக்ரம் படத்தில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாசில் தளபதி 67 தளபதியுடன் இனைகிறார் என்ற செய்தி வலம் வருகிறது.

45 ஆண்டுகள் தமிழ் சினிமா உலகில் நிறைவு செய்தார் பாரதிராஜா :

சென்னை வடபழனியில் 45 ஆண்டுகள் தமிழ் சினிமா உலகில் நிறைவு செய்த இயக்குனர் பாரதி ராஜாவுக்கு பாராட்டு விழா மற்றும் தமிழ் சினிமா திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாரதி ராஜாவுடன் மேடையில் அமர்ந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். விக்ரம் படம் வெளிவந்த போது கூட பாரதிராஜா தன்னை கூப்பிடு பாராட்டினார். இந்த நிகழ்ச்சியை பொறுத்த வரை ஒரு விஷயத்தை சரியாக மக்களுக்கு கொண்டு சென்றது பத்திரிகையாளர்களே. உங்களுக்கு நான் நிறைய கடமைப்பட்டு உள்ளேன் என்றார்.

-விளம்பரம்-

அதிகாரபூர்வ தகவலுக்காக காத்திருங்கள் :

பாரதிராஜா படத்தில் நான் அதிகமாக பார்த்த படம் டிக் டிக் மற்றும் சிவப்பு ரோஜா தான். அந்த காலத்தில் மக்கள் இதை எப்படி ஏற்றுக்கொண்டனர் என்று நான் நடிகர் கமல்ஹாசனிடம் கேட்டேன், அதற்கு பாரதி ராஜா தான் காரணம் என்றும், எனக்கு நடிக்கும் ஆர்வம் இருந்ததால் கதையை பற்றி நான் யோசிக்கவில்லை என்று கமல் தெரிவித்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லோகேஷ் கனகராஜ், நான் சினிமா உலகில் மிகவும் ஜூனியர், தொடர்ந்து ஊடகத்தின் ஒத்துழைப்பு மட்டுமே காரணம் என்றார். எனது அடுத்த படம் எழுத ஆரம்பித்து விட்டேன், எனது அடுத்த படம் பற்றி புரெடக்ஷன் சார்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை சற்று காத்து இருங்கள் என்றார்.

அஜித் உடன் வேலை ஆசை உள்ளது லோகஷ் கனகராஜ் :

இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் பாலிவுட் நடிகரான சல்மான் கானை சந்தித்து ஒரு கதை கூறியுள்ளதாகவும், அக்கதை அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் தகவல் வந்துள்ளது. எனவே விரைவில் லோகேஷ் கனகராஜ் சல்மான் கானை இயக்கவுள்ளார் எனவும் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் தளபதி 67 படத்திற்கு முன்பே லோகேஷ் பாலிவுட் செல்கின்றாரா இல்லை தளபதி 67 படத்தை இயக்கிவிட்டு செல்கின்றாரா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கும் நிலையில். ரஜனி மற்றும் கமலை வைத்து ராஜ் கமல் புரெடக்ஷனில் படம் எடுக்க போவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இது அவ்வளவு எளிதாக நடக்கும் விஷயம் இல்லை, ஆனால் நடந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றார். மேலும் அனைத்து நடிகர்களுடன் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது, குறிப்பாக அஜித்துடன் வேலை செய்ய வேண்டும் என்று ஆசை உள்ளது, இது ஒரு பெரிய செயல், நேரம் வரும் பொழுது நடைபெறும் என்று நம்புகிறேன் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

Advertisement