அட்லி பையன் பாவம்! ‘தெறி’ படம் காப்பி- அப்படியே எடுத்த அசிங்கம்- பிரபல இயக்குனர்

0
4187
atlee

அன்று ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ படங்களின் மூலம் மிகச்சிறந்த இயக்குநராகவும், இன்று ‘தெறி’, ‘நிமிர்’ படங்களின் மூலம் நடிகராகவும் ஜொலிக்கும் இயக்குநர் மகேந்திரனைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றோம். அவர் மட்டுமல்ல, பெரிய சைஸ் சத்யஜித்ரே படமும், அவர் வாங்கிக் குவித்த விருதுகளும் நம்மை வரவேற்கின்றன.
Director Mahendranதெறி’க்கு முன்னாடியே என்னை ரெண்டு படத்துக்கு நடிக்கக் கூப்பிட்டாங்க. ‘ஆய்த எழுத்து’ல நடிக்கக் கூப்பிட்டாங்க. என்னன்னு தெரியலை. நான் அதையெல்லாம் தவிர்த்துட்டேன். நாம யார்கிட்டயும் நெருங்கிப் பழகாட்டியும்கூட தயாரிப்பாளர் தாணுவும், அட்லியும் வந்து என்கிட்ட கேட்டாங்க. விஜய் ஆசைப்படுறாருனு சொன்னாங்க.

இதையும் படிங்க: விஜயின் தீவிர ரசிகை நான், அவருடன் படத்தில் நடித்து டூயட் பாட ஆசை! – சொன்னது யார்?

அதுக்கு மேல என்னால மறுக்க முடியலை. அதற்கு முன்னாடி ஒரு தடவை நான் விஜயைப் பாத்திருக்கேன். ‘சச்சின் ‘ படத்துக்குப் பூஜை போட்டப்போ என்கிட்ட வந்து நல்லாப் பேசுனாரு. விஜய் மேல ஒரு மரியாதை. அதனால ‘தெறி’க்கு ஒத்துக்கிட்டேன். அட்லி கதை சொல்றப்போகூட என்னவோ சொல்லிட்டு இருந்தாரு. நான் அட்லியையே நல்லாக் கவனிச்சிட்டு இருந்தேன்.
 Director Mahendranதமிழ் சினிமாவுல எந்தப் படம் வந்தாலும், ‘இது அந்தப் படத்தோட காப்பி’ங்கிற வாதமும் வந்துடுதே?

‘தெறி’ படம் வேற படத்தோட காப்பினு சொன்னாங்க. அதேமாதிரி கதையில வேற யாரும் படம் எடுக்கலையா என்ன… அட்லி பையன் பாவம். அவன் இப்போதான் வளர்ந்துட்டு வர்றான். எல்லாப் படமும் காப்பினு சொல்றாங்க. இப்போ ஒரு படம் இதுல இருந்துதான் வந்துச்சுனு சொல்லவே முடியாது.
atlee
அந்தப் படத்துக்கு மூலமா ஒரு படம் இருந்திருக்கும். அதுக்கு மூலமா ஒரு படம் இருந்திருக்கும். எதைப் பார்த்தாலும் காப்பினு சொல்றாங்க. ஒரு சிலர் அதை ரொம்ப பெருசுப்படுத்துறாங்க. எவ்வளவோ பிரச்னைகள் இருக்கும்போது ஒரு படம் இந்த மாதிரி வந்தா அதையே பிடிச்சிகிட்டு காப்பி காப்பினு சொல்றாங்க. வேலையில்லாதவங்க செய்ற வேலை இது.