தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018ல் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்த படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படமும் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

இதனை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன், வாழை போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த படத்தை பார்த்து பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். கடைசியாக மாரி செல்வராஜ் அவர்கள் துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தை எடுத்தார். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் தயாரித்தது. இந்த படம் மணத்தி கணேசன் என்ற கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
மாரி செல்வராஜ் குறித்த தகவல்:
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்து மாரி செல்வராஜ் அவர்கள் தனுசை வைத்து படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில்
தூத்துக்குடியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மாரி செல்வராஜ் இடம் விஜய் பற்றி கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு மாரி செல்வராஜ், நான் சின்ன வயதில் இருந்தே விஜய் சாரோட தீவிர ரசிகர்.

மாரி செல்வராஜ் பேட்டி:
எனக்கு விஜய் சார் ரொம்ப பிடிக்கும். நான் சினிமாவுக்கு வருவதற்கு அவரும் ஒரு காரணம். நான் தியேட்டருக்கு செல்ல விஜய் சார் ஒரு முக்கிய காரணம். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு நல்லது செய்யலாம். யார் வந்தாலும் நாம் வரவேற்க வேண்டும். அவரின் அரசியல் நிலைப்பாடு முழுமையாக வெளிப்படும்போது புரிந்து கொள்ள முடியும்.
https://www.youtube.com/watch?v=Q6kzA-cxHEo
விஜய் பற்றி சொன்னது:
அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அடுத்ததாக நான் தனுசை வைத்து படம் இயக்குகிறேன். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கும். இது ஒரு பேண்டஸி வரலாற்று மற்றும் அரசியல் சார்ந்த படம். என் கேரியரில் இது மிகப்பெரிய படமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.






