தஞ்சாவூரில் பெண் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்திருக்கும் சம்பவம் தொடர்பாக இயக்குனர் மோகன் ஜி போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பநாடு பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ஒருவர். இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இன்னொரு பக்கம் இவர் கவிதாசன் என்பவரை காதலித்து இருந்தார்.
இந்த நிலையில் விடுமுறைக்காக சில நாட்களுக்கு முன்பு அந்த இளம் பெண் தன்னுடைய வீட்டுக்கு வந்திருந்தார். இதை அறிந்த காதலன் கவிதாசன் அவருடைய வீட்டுக்கு வர சொல்லி அழைத்திருக்கிறார். ஆரம்பத்தில் மறுத்த அந்த இளம் பெண் காதலரின் கட்டாயத்தால் ஒத்து கொண்டார். பின் வீட்டில் யாரும் இல்லை என்று ஆள் நடமாட்டம் இல்லாத கொட்டகை பகுதிக்கு கவிதாசன் வரச்சொல்லி இருந்தால் அந்த இளம் பெண்ணும் நம்பி சென்றிருக்கிறார்.
இளம் பெண்ணை கூட்டு பலாத்காரம் :
அங்கு குடிபோதையில் கவிதாசன் தன்னுடைய நண்பர்களுடன் இருந்திருக்கிறார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ஏதோ பிரச்சனை வரப் போகிறது என்று தெரிந்து ஓட முயற்சி செய்தார். அப்போது கவிதாசன் தன்னுடைய நண்பர்களுடன் பீர் பாட்டிலை உடைத்து கையில் வைத்து எங்காவது நகர்ந்தால் குத்தி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் பீர்பாட்டில் மற்றும் கத்தியை காண்பித்து மிரட்டி அந்த பெண்ணின் துணிகளை அகற்ற சொல்லியிருக்கிறார்கள்.
போலீசில் புகார் :
அந்த பெண்ணால் எதுவுமே செய்யவில்லை. பின் கவிதாசன் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அவரை தொடர்ந்து அவருடைய நண்பர்களும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த நான்கு பேரில் ஒருவர் இந்த சம்பவத்தை போனில் வீடியோவாகவும் எடுத்திருக்கிறார். கஞ்சா போதையில், குடி போதையிலும் அந்த கொடூர மிருகங்கள் செய்த சம்பவத்தை அந்த இளம்பெண் ஓரத்த காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
தனியா தப்பான நபரை சந்திக்க போன இதெல்லாம் நடக்கும்.. அதுவும் போதையில் இருக்கும் கொடுர மிருகங்களிடம் சிக்கினால் சீரழிவு தான்.. வெளியே வராத பல கொடுர சம்பவங்கள் இது போல உண்டு.. ஆயுள் முழுக்க சிறையில் அடையுங்கள் இந்த மிருகங்களை.. https://t.co/offuKoV6VK
— Mohan G Kshatriyan (@mohandreamer) August 15, 2024
போலீஸ் விசாரணை :
அதன் பின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருக்கிறது. மேலும், அந்த கொடூர சம்பவத்தை செய்த கவிதாசன், பிரவீன், திவாகர், 17 வயது சிறுவன் உட்பட 4 பேரையும் போலீஸ் கைது செய்தது. இந்தக் கோர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த சம்பவம் தான் தஞ்சாவூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மோகன் ஜி பதிவு :
இந்த நிலையில் இது தொடர்பாக இயக்குனர் மோகன் ஜி பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், தனியா தப்பான நபரை சந்திக்க போன இதெல்லாம் நடக்கும்.. அதுவும் போதையில் இருக்கும் கொடுர மிருகங்களிடம் சிக்கினால் சீரழிவு தான்.. வெளியே வராத பல கொடுர சம்பவங்கள் இது போல உண்டு.. ஆயுள் முழுக்க சிறையில் அடையுங்கள் இந்த மிருகங்களை என்று கூறி இருக்கிறார். இவரை தொடர்ந்து பலரும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.