தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் எம் முத்தையா. இவர் விருதுநகரைச் சேர்ந்தவர். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் திரைகதை ஆசிரியருமாவார். 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த குட்டிப்புலி என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். தற்போது இவர் விருமன் என்ற படத்தை இயக்கி வருகிறார். பெரும்பாலும் இவர் இயக்கிய படங்கள் எல்லாம் கிராமத்து பாணியில் இருக்கும். அதே போல் விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி வருகிறது.
இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடிக்கிறார். கொம்பன் படத்தை தொடர்ந்து விருமன் படத்தில் கார்த்திக்– முத்தையா மீண்டும் இணைந்துள்ளார்கள். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அறிமுக நடிகை அதிதி சங்கர் நடிக்கிறார். இவர் வேற யாரும் இல்லைங்க பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
விருமன் படத்தில் நடிக்கும் நடிகர்கள்:
மேலும், இந்த படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ராதிகா உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் மற்றும் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். அதோடு இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி, மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்தது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமில்லாமல் இன்னும் சில மாதங்களில் விருமன் படம் திரைக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
முத்தையா அளித்த பேட்டி :
இந்நிலையில் இயக்குனர் முத்தையா சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். அதில் அவர் பெண் பிள்ளை வளர்ப்பு பற்றியும், அதிதி குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, பொதுவாகவே நான் என் மகளை தனியாக போட்டோ எதுவும் எடுக்க விட மாட்டேன். அப்படியே எடுத்தால் குடும்பத்தோடு எடுப்போம், நான் எடுப்பேன் தவிர மாலில் நின்று தனியாக எடுப்பது, போட்டோ ஷூட் பண்ணுவது என்று இந்த மாதிரி செய்ய விடமாட்டேன்.
நான் பழைமைவாதி தான்:
ஏனென்றால் இப்ப இருக்கும் காலகட்டத்தில் அதை வைத்து தவறாக சித்தரித்து வருகிறார்கள். பெண்பிள்ளையை பெண்ணாக தான் வளர்க்க வேண்டும். இதனால் என்னை பழமைவாதி என்று சொன்னாலும் எனக்கு அதை பத்தி கவலை இல்லை. நான் பழமைவாதி தான். அதே போல் நான் இயக்கும் விருமன் படத்தில் தமிழ் சினிமா உலகின் மிக பிரபலமான இயக்குனர் சங்கரின் மகள் அதிதி நடிக்கிறார். அவரை நான் பாப்பா என்று தான் கூப்பிடுவேன். மேலும், அவருடைய புகைப்படத்தை எல்லாம் பார்த்து தான் இந்த படத்தில் நடிப்பதற்கு ஓகே சொன்னேன்.
வீடியோவில் 14 நிமிடத்தில் பார்க்கவும்
அதிதி படம் நடிக்க சங்கர் ஒத்து கொண்ட விஷயம்:
அப்போது நான் அவரிடம் அப்பா ஒத்துக்கொண்டாரா? என்று கேட்டேன். அதற்கு அதிதி ஆரம்பத்தில் அப்பா படங்களில் வேண்டாம் என்று தான் மறுத்தார். ரொம்ப நாட்களுக்குப் பிறகுதான் படத்தில் நடிக்க அனுமதி தந்தார் என்று சொன்னார். மேலும், அவர் இந்த படத்தில் நடிக்க வந்ததற்கு காரணம் என்னை பொறுத்தவரை சூர்யா சாரின் தயாரிப்பு, கார்த்திக் நடிப்பு. இது தான் என்று நான் நினைக்கிறேன். திரையில் இயக்குநர் சங்கர் சார் பார்க்கும்போது என்ன சொல்லி விடுவாரோ? எப்படி இருக்குமோ? என்று எல்லாத்தையும் கவனத்தில் கொண்டுதான் படத்தை எடுத்தேன். படம் நிச்சயம் அவருக்கு பிடிக்கும் மக்களுக்கும் பிடிக்கும் என்று கூறியிருந்தார்.