மிஸ்கின் மகளின் புகைப்படம் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் வித்யாசமான படங்களை கொடுப்பதில் கை தேர்ந்தவர் மிஸ்கின். தற்போது இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். மிஸ்கின் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் முதலில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருந்தார்.
அதன் பின் இவர் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இது பலரும் தெரிந்த ஒன்று.
மிஸ்கின் திரைப்பயணம்:
மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று பிசாசு. கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த ‘பிசாசு’ திரைப்படம் வெளியாகி இருந்தது. தமிழ் சினிமாவில் ஒரு பேயை அன்பான பேயாக காட்டியது என்றால் அது இந்த படத்தின் மூலம் தான். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது மிஸ்கின் அவர்கள் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்து இருக்கிறார்.
பிசாசு 2 படம்:
இந்த பிசாசு 2 படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்து இருக்கிறார். மேலும், கௌரவ தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் குறித்து ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் மிஸ்கின் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.
மிஸ்கின் அளித்த பேட்டி:
அதில் அவர் கூறியிருப்பது, பலர் நான் நடிக்க வேண்டும் என்று விரும்பி கேட்டார்கள். நடிப்பதற்கு அதிக பணம் தருவதாக கூறியதால் மறுக்க முடியவில்லை. ஆனால், அதே நேரத்தில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போது நடிக்கமாட்டேன். இயக்கி முடித்த அடுத்த படத்தை ஆரம்பிக்கும் வரை மட்டுமே நடிக்க வரும் வாய்ப்பை ஏற்றுக் கொள்வேன். மேலும், நடிப்பதின் மூலம் கிடைக்கும் பணத்தை தனியாக சேமித்து வைத்திருக்கிறேன். அது என் மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருக்கிறேன்.
மகள்-மனைவி குறித்து மிஸ்கின் சொன்னது:
நான் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். திருமணத்திற்கு பின் எனக்கு அழகான மகள் பிறந்தாள். ஆனால், மகள் பிறந்த சில நாட்களிலேயே மனைவியை பிரிந்துவிட்டேன். எங்களுடைய பிரிவிற்கு முழுக்க முழுக்க நான் தான் காரணம். என் மனைவி மகளை நன்றாக பார்த்துக் கொள்கிறார். அதுமட்டுமில்லாமல் அவள் என்னையும் நேசித்துக் கொண்டே இருக்கின்றார் என கேள்விப்பட்டேன் என்று மிகவும் எமோஷனலாக பேசி இருந்தார். இப்படி மிஸ்கின் அளித்திருந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.