100 நாள் ஓடிய கேப்டனின் படம் – மேடையில் ரஜினி கொடுத்த பரிசு. அறிய புகைப்படம் இதோ.

0
336
vijayakanth
- Advertisement -

கேப்டன் விஜயகாந்த்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினி அளித்த பரிசு புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாக திகழ்ந்து கொண்டிருந்தவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கேப்டன் விஜயகாந்த். இருவருமே ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. இருவரின் படங்களுமே திரையரங்களில் போட்டி போட்டுக்கொண்டு ஓடி இருந்தது. இவர்கள் இருவருக்குமே தமிழகத்தில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் கர்நாடக மாநிலத்தில் பேருந்து நடத்துனராக வாழ்க்கையை தொடங்கி இன்று தமிழ் திரையுலகில் மிகப் பெரிய ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் 168 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

- Advertisement -

ரஜினிகாந்த் திரைப்பயணம்:

அதோடு இவருடைய நடிப்பு திறமைக்காக கடந்த ஆண்டு தேசிய விருதும் பெற்றிருந்தார். தற்போது ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தை நெல்சன் குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக சென்று கொண்டு இருக்கிறது.

விஜயகாந்த் திரைப்பயணம்:

அதேபோல் தமிழ் சினிமாவில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் ஒரு காலத்தில் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் இவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய பல படங்கள் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்து இருக்கிறது.

-விளம்பரம்-

விஜய்காந்த் உடல்நிலை:

இவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். அது மட்டுமில்லாமல் சமீப காலமாக அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் கூட ரஜினி அவர்கள் விஜயகாந்தை நேரில் சந்தித்து அவருடைய உடல்நிலை குறித்து விசாரித்து இருந்தார்.

விஜயகாந்த்- ரஜினிகாந்தின் அரிய புகைப்படம்:

இந்த நிலையில் விஜயகாந்த்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ரஜினிகாந்த் அவர்கள் நடிகர் விஜயகாந்த் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு இருந்தார். வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவில் ரஜினி அப்படத்தின் ஹீரோ விஜயகாந்திற்கு பதக்கம் அணிவித்து இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement