என்னது இத்தனை நிமிடங்கள் ஆடை இல்லாமல் ஆண்ட்ரியா – பிசாசு 2 குறித்து பேசிய மிஸ்கின்.

0
3132
pisasu-2
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் வித்யாசமான படங்களை கொடுப்பதில் கை தேர்ந்தவர் மிஸ்கின். மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘பிசாசு’ திரைப்படமும் ஒரு வித்யாசமான பேய் படமாக இருந்தது. தமிழ் சினிமாவில் ஒரு பேயை அன்பான பேயாக காட்டியது என்றால் அது இந்த படத்தின் மூலம் தான். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது மிஸ்கின் அவர்கள் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். மேலும், முதல் பாகம், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பு இல்லை என்றும் இது மாறுபட்ட கதை என்றும் சமீபத்திய மிஸ்கின் அவர்கள் கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Andrea within the Bathtub Dub: The First Look of the Pisasu 2 Film Launched  - Scopez News

இந்த பிசாசு 2 படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.கௌரவ தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தின் ரிலீஸ் குறித்து ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தநிலையில் இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் ஆண்ட்ரியா அவர்கள் நிர்வாணமாகப் போஸ் கொடுத்திருந்தார். இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்தன.

- Advertisement -

இந்நிலையில் இது தொடர்பாக தற்போது மிஸ்கின் அவர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவர் கூறியது, கிளாமர் என்பது சில படத்திற்கு தேவை, சில படத்திற்கு தேவையில்லை. ஆண்ட்ரியா ஆடையே இல்லாமல் 15 நிமிடம் காட்சி எடுக்க ஐடியா இருந்தது. பின் வேண்டாம் என்று விட்டுவிட்டோம். ஆனால், அதற்கு பின் ஆண்ட்ரியா வைத்து நிர்வாணமாக ஒரு போட்டோ ஷூட் நடத்தினோம். ஆனால், போட்டோ ஷூட் எடுக்கும் போது இந்த காட்சிகள் வைக்கலாமா? வேண்டாமா? என்று குழப்பத்தில் இருந்தேன். படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது எனக்குள் ஒரு மனப் போராட்டம்.

அதை ஒரு ஆடியன்சாக எல்லோரும் கலை உணர்வுடன் பார்க்க மட்டார்கள். பல பேர் அதை தவறான நோக்கில் தான் பார்ப்பார்கள். அதனால் இயக்குனராக எனக்கு ஒரு வருத்தம் இருந்தது. அந்த காட்சிகளை கொஞ்சம் சென்சார் பண்ணி இருக்கிறேன். படம் பார்த்தால் முகம் சுளிக்கிற மாதிரி எல்லாம் காட்சிகள் இல்லாமல், காம எண்ணம் தோன்றாத மாதிரிதான் நான் கையாண்டிருக்கிறேன் என்று கூறினார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement