நண்பனே எனக்கு காதலன் ஆனால்அது தான் ஸரித்திரமோ – தனது வருங்கால கணவரை அறிவித்த தீபிகா.

0
1336
Deepika
- Advertisement -

கனா காணும் காலங்கள் 2 சீரியல் நடிகை தீபிகா காதலிக்கும் நபர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்களில் ஒன்று தான் ‘கனா காணும் காலங்கள்’. இந்த சீரியல் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. இந்த சீரியல் 2006 ஆம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பப்பட்ட தொடர்.

-விளம்பரம்-

அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பி டாப்பில் இந்த தொடர் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது. இந்த இரு தொடர்களும் வெற்றி தொடராக அமைந்தது. அதோடு இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர், நடிகைகள் தொலைக்காட்சிகளிலும், வெள்ளித்திரையிலும் பிரபலமானவர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கனா காணும் காலங்கள் தொடரின் இரண்டாவது சீசன் ஹாட் ஸ்டாரின் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இதில் டிக் டாக் மூலம் பிரபலமான பிரபலங்கள் சிலருக்கு விஜய் டிவி வாய்ப்பு கொடுத்துள்ளது. அந்த வகையில் இந்த சீரியலில் டிக் டாக் பிரபலம் தீபிகா நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலில் அபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் டிக் டாக் வீடியோ மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் நபர். இவர் போடும் வீடியோக்கள், புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதன் மூலம் தான் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று சொல்லலாம். இந்த நிலையில் தீபிகா காதலிக்கும் நபர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

அதாவது, சமீபத்தில் அனிருத் கான்சர்ட் நிகழ்ச்சி ஒன்று நடந்திருந்தது. அதில் 30 ஆயிரம் பேருக்கு மேல் இருக்கும் இடத்தில் தீபிகா காதுக்கு அருகில் ஐ லவ் யூ என்று நபர் ஒருவர் ப்ரொபோஸ் செய்து இருக்கிறார். இத்தொடர்பாக தீபிகாவும் போஸ்ட் செய்திருந்தார். பின் நான்கு மாதங்கள் கழித்து அந்த நபருக்கு தீபிகா தன் காதலை சொல்லி இருக்கிறார். அப்போது அவர் கண்ணீருடன் தன்னுடைய காதலை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

அந்த வீடியோவில் தீபிகா காதலுக்கும் நபர் யார்? என்று தெரியவில்லை. ஆனால், பலரும் அது ராஜ் வெற்றியாக இருக்கும் என்று கமண்ட் செய்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் ரசிகர்கள் எதிர் பார்த்தது போலவே அது ராஜ் வெற்றிதான். சமீபத்தில் தான் இவர்கள் இருவருக்கும் நிச்சயம் முடிந்து இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் திருமணம் என்று பதிவிட்டுள்ள தீபிகா ‘ நண்பனே எனக்கு காதலன் ஆனால் அது தான் ஸரித்திரமோ’ என்று உருகுமுடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement