விஜய் சேதுபதி தன் மகளுடன் இணைந்து நடித்துள்ள ‘முகிழ்’ எப்படி இருக்கிறது – முழு விமர்சனம் இதோ.

0
2654
Mugizh
- Advertisement -

இயக்குனர் கார்த்தி சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் முகிழ். இந்த படத்தில் கதாநாயகியாக ரெஜினா நடித்துள்ளார். இந்த படத்திற்கு ரேவா இசையமைத்துள்ளார். சத்யா பொன்மார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தொடர்ந்து படங்களை வெளியிட்டு இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை இங்கு பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

- Advertisement -

விஜய் சேதுபதி தன்னுடைய மனைவி ரெஜினா, மற்றும் மகள் ஸ்ரீஜா உடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். நாய் என்றாலே பயந்து தூரம் செல்லும் தன் மகளின் பயத்தை போக்கவே செல்லமாக வீட்டில் நாய்க்குட்டியை வாங்கி வருகிறார் விஜய் சேதுபதி. பின் இவர்கள் செல்லமாக நாய்க்குட்டி ஒன்றை வளர்க்கிறார்கள். விரைவிலேயே ஸ்ரீஜா நாயுடன் கொஞ்சி விளையாட ஆரம்பிக்கிறாள். இந்த நாயை தங்களின் குடும்பத்தில் ஒரு நபராக பார்த்து பாசமாக வளர்த்து வருகிறார்கள் விஜய் சேதுபதி குடும்பம்.

ஒருநாள் ஸ்ரீஜா தன் பள்ளி தோழிக்கு ஒரு நோட்டுப் புத்தகத்தைக் கொடுக்க வெளியே செல்கிறார். அந்த நேரத்தில் நாயும் ஸ்ரீஜாவின் பின்தொடர்கிறது. விபத்தில் மகள் கண் முன்னே அந்த நாய் இறக்கிறது. இதனால் விஜய்சேதுபதியின் குடும்பம் சோகத்தில் மூழ்கியது. தன் குடும்பத்தில் இருந்த ஒரு நபர் பிரிந்தது போன்ற துக்கத்தில் அனைவரும் இருக்கிறார்கள். அதிலும் விஜய்சேதுபதி மகள் நாய் இறப்பிற்கு தான்தான் காரணம் என்று வருத்தத்தில் இருக்கிறார்.

-விளம்பரம்-

இறுதியில் சோகத்தில் இருந்த குடும்பத்தை விஜய் சேதுபதி மீட்டாரா? தன் மகளின் குற்ற உணர்ச்சியை விஜய் சேதுபதி போக்கினாரா? என்பதே படத்தின் மீதி கதை. வழக்கம்போல் விஜய் சேதுபதி அவர்கள் படத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மகள், மனைவி, குடும்பம் என்று பாசத்தில் தன் நடிப்பின் மூலம் மக்களை மீண்டும் கவர்ந்து இருக்கிறார் விஜய் சேதுபதி.

மேலும், தன் கணவரான விஜய் சேதுபதியுடன் சண்டை போடுவது, மகளை திட்டுவது,கொஞ்சுவது என நடிப்பில் தாயாகவே மாறி ரெஜினா தூள் கிளப்பி இருக்கிறார் என்று சொல்லலாம். ரெஜினா தன்னுடைய கதாபாத்திரத்தை கன கச்சிதமாக செய்துள்ளார். படத்தில் மகளாக வரும் ஸ்ரீஜா தனது நடிப்பை அளவாக வெளிப்படுத்தி உள்ளார். கதைக்களம் சிறியதாக இருந்தாலும் அதை சிறப்பாக இயக்கியிருக்கிறார் கார்த்திக் சாமிநாதன். தந்தை, மனைவி, மகள், நாய் பாசத்தை அழகாக சொல்லி இருக்கிறார்.

பிளஸ்:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து உள்ளார்கள்.

இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக உள்ளது.

சாதாரண குடும்ப கதையயை அழகாக சொல்லி இருக்கிறார்.

படத்தில் கதாபாத்திரங்கள் குறைவாக இருந்தாலும் சொல்ல வேண்டிய கருத்துகளையும் காட்சிகளையும் நிறைவாக தந்திருக்கிறார் இயக்குனர்.

மைனஸ்:

குறும்பட கதையை கொஞ்சம் நீட்டி முழக்கி உள்ளார் இயக்குனர். ஒரு மணி நேரம் எல்லாம் தேவையில்லை.

நாய் இறக்கிறது அதனால் குடும்பமே சோகத்தில் உள்ளது. வழக்கமான கான்செப்ட் தான். இதில் எந்த ஒரு புது மாற்றமும் இல்லை.

செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்கள் கூட இந்த அளவிற்கு இருப்பார்கள் என்று தெரியவில்லை என கூறுகின்றனர்.

மொத்தத்தில் முகிழ் — ஒரு முறை பார்க்கலாம்.

Advertisement