பிரதீப் ரங்கநாதனின் டிராகன் பட விழாவில் மிஷ்கின் பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் தற்போது இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் ‘கோமாளி’ படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகி இருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘லவ் டுடே’.
இந்தப் படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் மற்ற இயக்குனர்களின் டைரக்ஷனில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்துள்ள படம் ‘டிராகன்’. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர் உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து முதல் முதலாக ‘ஓ மை கடவுளே’ என்கிற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.
ட்ராகன் படம்:
இதை அடுத்து இவர் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கியிருந்தார். தற்போது இவர் இயக்கியிருக்கும் ‘டிராகன் திரைப்படத்திற்கு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படம் வருகின்ற 21 ஆம் தேதி வெளியாகும் நிலையில், சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய பிரீ ரிலீஸ் நிகழ்வு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பட குழுவினருடன் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.
விழாவில் மிஸ்கின் சொன்னது:
அப்போது விழாவில் கலந்து கொண்ட மிஸ்கின், இன்று நான் எந்த கெட்ட வார்த்தையும் பேசப்போவதில்லை. என்னுடைய ஒரு கொம்பை அறுத்து விட்டார்கள். இன்னும் ஒரு கொம்பு தான் இருக்கு. இது மாதிரியான மேடைகளுக்கு ஒரு வருடம் வராமல் இடைவெளி எடுக்கலாம் என்று நினைத்தேன். பிரதீப் ரங்கநாதன் ஒரு புரூஸ் லி. இதுவரைக்கும் அவன் ஆக்சன் படம் பண்ணவே இல்லை. ஒருவேளை என்னுடன் பண்ணினாலும் பண்ணுவான். ரொம்ப நாட்களுக்கு பிறகு சினிமாவில் ஒரு இளமையான ஸ்டாரை பார்க்கிறேன்.
பிரதீப் ரங்கநாதன் பற்றி சொன்னது:
இது லக்ல நடந்த விஷயம் கிடையாது. இதற்காக அவன் நிறைய வியர்வை கொடுத்து உழைத்திருக்கிறான். இந்த படத்தில் அவனுக்கு நான் தான் வில்லன். ஆனால், நல்ல வில்லன். ரொம்ப அர்ப்பணிப்போட தன்னுடைய வேலைகளை எல்லாம் செய்வான். ரொம்ப கனிவானவன். அந்த லிஸ்டில் விஜய் சேதுபதி இருக்கான். இப்ப இருக்கிற நடிகர்கள் நான்கு படங்கள் நடிப்பார்கள். அதற்கு பிறகு உயரமே ஆகாமல் இரண்டு அடி வளர்ந்திடுவார்கள். ரசிகர் மன்றமெல்லாம் வைத்துவிடுவார்கள். இதை நான் பிரதீப் உடன் படம் பண்ணுவதற்காக சொல்லவில்லை. இவ்வளவு சின்ன வயதில் அவனுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவனைப் பற்றி என்னுடைய உதவி இயக்குனர்களிடம் பேசுவேன்.
பேட் கேர்ள் படம் குறித்து சொன்னது:
அப்போது அவர்கள், என்ன சார் அவன் என்ன பெரிய வெங்காயம்மான்னு கேட்பாங்க. அதற்கு நான், ஆமாம் அவன் பெரிய வெங்காயம்தான் என்று சொல்வேன். அவனுடன் வேலை பார்த்ததை எண்ணி பெருமையாக உணர்கிறேன். அஸ்வந்த் மாரிமுத்து ரொம்ப கடினமாக உழைக்கக்கூடிய ஒரு இயக்குனர். இன்றைய இளைஞர்களுக்கு சொல்ல வேண்டிய விஷயத்தை அவர்கள் வழியிலேயே சென்று சொல்லியிருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு சிம்பு கூட ஒரு படம் செய்கிறேன். அதேபோல் சமீபத்தில் பேட் கேர்ள் என்ற ஒரு படத்தோட ட்ரெய்லர் வந்தது. அந்த படத்தை வெளிவரவிடாமல் போட்டு அமுக்குகிறார்கள். அந்த படத்தை ஒரு பெண் எடுத்திருக்கிறார். 20 வருடத்திற்கு ஒரு பெண் இயக்குனர் தான் வருவார்கள். அந்த பெண்ணோட படம் வெளியில் வரணும். அந்தப் பெண் ரொம்ப கலங்கி இருக்கிறார். இந்த விஷயத்தை இங்கு நான் பதிவு பண்ண விரும்புகிறேன் என்று கூறி இருக்கிறார்.