“பிராமின் டச் இல்லாம தமிழ்நாட்ல எதுவுமே நகராது” – பிரமண தலைவர் பேச்சுக்கு மூடர் கூடம் இயக்குனர் பதிலடி.

0
1453
naveen
- Advertisement -

சமீபத்தில் தமிழக அரசு அணைத்து ஜாதி இனத்தவரும் கோவில்களில் அர்ச்சனை பண்ணலாம் என்று அறிவித்து இருந்தார்கள். இதனால் தமிழகத்தில் பல சர்ச்சைகள் எழுந்தது. இதனால் பல பிராமணர்கள் கோயில்களுக்கு செல்ல மாட்டோம் என்றும் கோயில்களில் மற்ற ஜாதிக்காரர்களை அர்ச்சனை செய்ய அனுமதிக்கக்கூடாது என்றும் போராட்டம் செய்தார்கள். அதே போல கடந்த சில வரமாகவே பல்வேரு பிராமணர்களின் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் அவர்கள் பிராமணர் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் விவாதப்பொருளாக மாறி இருக்கிறது. இதற்கு இயக்குனர் நவீனும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் பேசிய நாராயணன், உலகம் முழுவதும் பிராமணர்கள் இருக்கிறார்கள். பிராமணர்கள் தான் ரொம்ப தைரியமானவர்கள்.

- Advertisement -

பிராமணர்களுக்கு என்று நாடு உண்டு, மண்ணு உண்டு, தேசமுண்டு. ரஷ்யாவிலும் சரி அமெரிக்காவிலும் சரி பிராமணர்கள் உண்டு. இந்தியா முழுவதும் நம்ம தான் இருக்கிறோம். எடப்பாடி முதலமைச்சரை சுற்றி இருந்த 7 அதிகாரிகளில் 5 அதிகாரிகள் பிராமணர்கள் தான். அதனால் தான் எடப்பாடி அவர்கள் கொரோனா காலத்தில் அருமையாக செயல்பட்டார்.

பிராமணர்கள் தொடுதல் இல்லாமல் தமிழ்நாட்டில் எதுவுமே இல்லை. தமிழ்நாட்டின் சிந்தனையும், செயலும் பிராமணர்கள் தான். பிராமணர்கள் இல்லாமல் இந்தியாவே இல்லை. பிராமணர்களை யாரும் அசைக்க முடியாது. மற்ற சாதிகளை விட, மற்ற சமூகங்களை விட பிராமணர்களுக்கு தான் பொறுப்பையும் அதிகாரத்தையும் கடவுள் கொடுத்து இருக்கிறார். இந்துக்கள் தான் இந்தியாவிற்கு அடித்தளம். இந்துக்கள் இல்லாமல் இந்தியாவே இல்லை. தமிழ் தாத்தா என்றால் சாமிநாதர் ஐயர் தான் . செட்டியார் இருக்காரா, தேவர் இருக்காரா, வன்னியர் இருக்காரா ?என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் இந்த வீடியோவை தற்போது இயக்குனர் நவீன் குமார் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சனாதன தர்மம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள கீழே விழும் அய்யாவின் உரையை கேட்கவும். உரை முழுதும் பிராமணரை பிறரை விட உயர்ந்தவராக கடவுள் படைத்துள்ளார். பிராமணர் தான் ஒசத்தி என்று பேசுபவர் கடைசியில் இந்து நாடு இந்துக்கள் ஒன்றுபடுவோம் என்கிறார். இப்படி நவீன் பதிவிட்ட டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement