வானம் கலைத் திருவிழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 2025 ஆம் ஆண்டிற்கான வானம் கலைத் திருவிழா ஏப்ரல் 1ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தகம் அரங்கில் தொடங்கி இருந்தது. இந்த கலைத் திருவிழா ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் ஆறாம் தேதி வரை நடைபெற்றது.

இந்த விழாவில் உலக அளவில் விருதுகள் வாங்கிய திரைப்படங்கள், தடை செய்யப்பட்ட உலக திரைப்படங்கள் உட்பட பல முக்கியமான படைப்புகள் திரையிடப்பட்டது. அந்த வகையில் 'சந்தோஷ்' என்ற படம் திரையிடப்பட இருந்தது. ஆனால், அந்த படத்தை திரையிட அனுமதி வழங்கவில்லை. இதற்காக ரஞ்சித் சப்போர்ட் செய்து பேசி இருந்தார். இந்த நிலையில் விழாவில் பேசிய பா ரஞ்சித், இவன் சாதி பத்தி பேசுகிறான்.
விழாவில் ரஞ்சித் சொன்னது:
எல்லோருமே ஒன்றாக இருக்கிறோம், நாம் ஒன்றாக தூங்கினோம், சாப்பிடுகிறோம். இவன் சாதி என்ற பெயரில் நம்மை பிரிக்க பார்க்கிறான் என்றெல்லாம் பேசினார்கள். என்னை படம் எடுக்க விடாமல் தடுத்தார்கள். ஜாதி பெயரில் படம் எடுக்க கூடாது என்று என்னை தடுத்தார்கள். பலருமே நான், ஒரு படத்தோடு நின்று விடுவான் என்றெல்லாம் நினைத்தார்கள். அதற்குப் பிறகு இவன் ஜாதி பெயரை சொல்லி சம்பாதிக்க ஆரம்பித்து விட்டான் என்று சொன்னார்கள்.
https://www.youtube.com/watch?v=yuyrGc8nMOI
விமர்சனங்களுக்கு பதிலடி:
அதற்கு பிறகு இவர் ஜாக்குவா காரில் வரான். அந்த காசு வச்சி ஏழை மக்களுக்கு உதவ வேண்டியதுதானே என்று சொன்னார்கள். நான் படம் பண்றது பிரச்சனையா? இல்ல நான் கார் வாங்குறது பிரச்சனையா? சம்பாதிப்பது பிரச்சனையா? என்ன தாண்டா உங்களுக்கு பிரச்சனை. நான் சம்பாதிச்சு என் சொந்த காசுல தான் வண்டி வாங்குனேன். நான் படமே எடுக்க கூடாது என்று தான் பலர் நினைக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
https://youtube.com/shorts/931jaKRmtSo?si=1OPYfhIl7Xpmm_e-
ரஞ்சித் திரைப்பயணம்:
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பா.ரஞ்சித். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘அட்டக்கத்தி’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாகக் கொண்டு ‘மெட்ராஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

ரஞ்சித் படங்கள்:
அதனைத் தொடர்ந்து இவர் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கியிருந்தார். பின் இவர் இயக்கிய சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. கடைசியாக இவர் இயக்கியிருந்த தங்கலான் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை அடுத்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.






