சமூக விரோத சனாதன கும்பல்களுக்கும் – சர்ச்சையை ஏற்படுத்திய காட்மேன் குறித்து பா ரஞ்சித் கருத்து.

0
1377
godman
- Advertisement -

சமீப காலமாக சோசியல் மீடியாவில் வெப்சீரிஸ் என்ற பெயரில் குறும் படங்கள் வெளியாகி வருகிறது. இதில் புதுமுக நடிகர்கள் முதல் முன்னணி நடிகர்கள் வரை என பலரும் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது புதிதாக தொடங்கிய உள்ள வெப்சீரிஸ் தான் காட்மேன். இந்த வெப்சீரிஸ் தொடரில் ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளர்கள். இதை இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். இத்தொடர் ஜீ5 தளத்தில் ஜுன் 12-ம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியானது. பின் அதைத்தொடர்ந்து டீசரும் வெளியானது. இந்த காட்மேன் வெப்சீரிஸ்ஸின் டீசர் வெளியானதிலிருந்து சோசியல் மீடியாவில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

-விளம்பரம்-

அந்த டீஸரில் ஒரு சில பகுதிகள் பிராமண சமூகத்திற்கு எதிரானதாகவும், பாலுணர்வைத் தூண்டக் கூடிய வகையிலும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால் அந்த காட்சிகளை நீக்கப்பட்டு புதிய டீசரும் வெளியிடப்பட்டது. இருந்தாலும் நாரயணன் மற்றும் பா.ஜ.கவைச் சேர்ந்த அஸ்வத்தாமன் என சில பேர் ஆன்லைனில் புகார் அளித்து உள்ளனர். இவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தயாரிப்பாளர் இளங்கோவன் மற்றும் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

- Advertisement -

பின் அவர்களை நேரில் ஆஜராகவும் சம்மன் அனுப்பினர். இதனை அடுத்து தயாரிப்பு நிறுவனம் சீரிஸ் வெளியிடுவதை ஒத்தி வைக்க அறிவித்தது. மேலும், படக்குழுவினர் இந்த வெப்சீரிஸை எதிர்ப்பவர்களை கண்டித்து சோசியல் மீடியாவில் கருத்து ஒன்று வெளியிட்டு உள்ளது. இந்த நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித் அவர்கள் இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பது,

காட்மேன் தொடரின் முன்னோட்டத்தை ஒட்டி அந்த தொடரின் தயாரிப்பாளர், இயக்குனர் & நடிகர் மீது அவதூறுகள் பரப்பியும், அச்சுறுத்தியும், பொய்வழக்குகள் தொடுக்கும் சமூக விரோத சனாதன கும்பல்களுக்கும், துணை நிற்கும் தமிழக காவல் துறைக்கும் வண்மையான கண்டனங்கள். இந்த தொடரை தயாரிப்பதில் உறுதுணையாக இருந்து விட்டு பிரச்சனை என்ற ஒன்று வந்தவுடன் ஸீ இந்தியா நிறுவனம் காட்மேன் தொடரின் குழுவினரை பாதுகாக்க தவறியது அர்த்தமற்ற செயல். இத்தொடரை வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement