ப்ரச்சனை சிம்பு இல்லை, அவங்க அப்பா அம்மா தான் – மனம் திறந்த இயக்குனர் பாண்டிராஜ்

0
98
- Advertisement -

தனக்கும் சிம்புவுக்கும் இடையேயான பிரச்சனை குறித்து இயக்குனர் பாண்டிராஜ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் இயக்குனர், நடிகர் டி ராஜேந்திரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

இது ஒரு பக்கம் இருக்க, சில ஆண்டுகளாகவே சிம்பு குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் தான் இருக்கிறது. இவர் சூட்டிங்க்கு சரியாக வரமாட்டார், ஒழுங்காக படத்தில் நடித்து கொடுக்க மாட்டார். சிம்பு பல பெண்களை காதலித்து காதலித்து இருக்கிறார் என்று பல வதந்திகள் எழுந்து இருக்கிறது. இதையெல்லாம் சிம்பு கண்டுகொள்ளவில்லை. இப்படி இருக்கும் நிலையில் சிம்பு நடிப்பில் வெளிவந்த இது நம்ம ஆளு என்ற படத்தை இயக்கி இருந்த இயக்குனர் பாண்டிராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

- Advertisement -

பாண்டிராஜ் பேட்டி:

அதில் அவர், நான் எப்போதும் சோம்பேறிகள் உடன் சேர்ந்து பணிபுரிய மாட்டேன். என்னுடைய படங்களில் நடித்த ஹீரோக்களுடன் நான் இன்றும் தொடர்பில் தான் இருக்கிறேன். அதே போல் எனக்கும் சிம்புவுக்கும் சில பிரச்சனைகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். உண்மையில் எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. அவருடைய அப்பா, அம்மாவால் தான் எனக்கு பிரச்சனை வந்தது. காரணம், இது நம்ம ஆளு படத்தின் சூட்டிங் போது சிம்பு தாமதமாக வருவார்.

சிம்பு குறித்து சொன்னது:

இருந்தாலுமே எட்டு மணி நேரத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளை எல்லாம் 5 மணி நேரத்திலேயே முடித்துக் கொடுத்து விடுவார். அந்த அளவிற்கு திறமையான நடிகர். இருந்தும் இவர் இப்படி செய்கிறாரே என்ற வருத்தம் தான் எனக்கு இருக்கிறது. அவர் மீது கோபப்பட்டதே இல்லை. அவரும் என்னைப் பற்றி விடிவி கணேசனிடம் பெருமையாகத்தான் கூறியிருக்கிறார் இப்போதும். சொல்லப்போனால், நாங்கள் நட்பாகத்தான் இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

சிம்பு திரைப்பயணம்:

மேலும், சிறிய இடைவெளிக்கு பின் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படம் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான படம் பத்து தல. இந்த படம் கன்னட மஃப்டி படத்தின் தமிழ் ரிமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

சிம்பு நடிக்கும் படங்கள்:

தற்போது சிம்புவின் 48வது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார். ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ந்த படத்தில் தீபிகா படுகோன், கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மணிரத்தினம்- கமல் நடிக்கும் தக் லைப் படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் புகழ்பெற்ற நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் கமலஹாசனின் மகனாக சிம்பு நடிப்பதாக கூறப்படுகிறது.

Advertisement