சமீபத்தில் தயாரிப்பாளர் வீட்டு திருமண நிகழ்வில் விஜய்-திரிஷா இருவரும் ஒன்றாக கலந்து கொண்டு இருந்தார்கள். இது தான் சோசியல் மீடியாவில் விவாத சர்ச்சையானது. பின் ஒரு நிகழ்ச்சியில் பார்த்திபன் கலந்து கொண்டிருந்தார். அப்போது திரிஷா புகைப்படத்தை காண்பித்து பேச சொன்னார்கள். அதற்கு பார்த்திபன், குந்தவை வீட்டிற்குள்ளே குந்த வைத்திருப்பது நல்லது என்று கூறியிருந்தார். இது மீண்டும் புதிய சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதை அடுத்து நடிகை திரிஷா அவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக பதிவு ஒன்று போட்டு இருந்தார்.

அதில் திரிஷா, மைக்கில் பேசுவதால் முட்டாள்தனமான கருத்துக்கள் எல்லாம் சரியாகி விடாது. ஒரு தனி நபரின் தூண்டுதலால் என்னுடைய பெயரை சேர்த்து தேவையற்ற கருத்துக்களை பேசியுள்ளனர். இதுபோன்ற அறிவில்லாத வார்த்தைகள் பேசப்படுபவரை விட பேசுபவரின் உண்மையான சுயரூபத்தையே காட்டும். என்று கூறி இருந்தார். இதற்கு விளக்கம் அளித்து நடிகர் பார்த்திபன் ஆடியோ ஒன்று போட்டு இருந்தார். இருந்தும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் பார்த்திபன் வெளியிட்ட வீடியோவில், தவறு என்பது தவறி செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திரும்ப பார்க்க வேண்டும்.
திரிஷா பற்றிய சர்ச்சை:
தப்பு செய்தவன் வருந்தி ஆக வேண்டும். அதே மாதிரி தான் நான் வருத்தம் தெரிவித்ததும் ஒரு விதம். ஒரு நிகழ்ச்சியில் தவறு நடந்ததாக உணர்கிறேன். உண்மையில் அது தவறி தான் நடந்தது. நிகழ்ச்சியில் விஜய், அஜித் பற்றி பேசும்போது ஒரு போட்டோ வந்தது. அதை பார்த்ததும் என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்து நின்றேன். இதை நான் என்னுடைய மரணம் வரைக்கும் செய்யப்போவதில்லை. காசு வாங்கிக்கொண்டு எந்த கட்சியிலும் சேரப் போவதுமில்லை. காசுக்காக நான் எந்த தவறையும் செய்யப்போவதில்லை. திரிஷா வீட்டிலேயே இருந்திருக்க வேண்டும் என்று பலரும் சொன்னார்கள்.
https://www.youtube.com/watch?v=lSUTsFxMMBY
பார்த்திபன் விளக்கம்:
அரசியல் என்பது சாதாரண விஷயம் கிடையாது. விஜய் பல தடைகளை கடந்து வந்து கொண்டிருக்கிறார். கரூர் பிரச்சனையில் கூட விஜய்க்கு விமர்சனங்கள் வந்தது. ஆனால், இந்த அளவுக்கு பாதிப்பு வரவில்லை. இவ்வளவு பாதிப்புக்கு காரணமான அந்த பெண்மணி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்பதன் என் அடி மனதில் இருந்தது. ஆனால், அதை சொல்வதற்காக அந்த மேடைக்கு நான் அந்த மேடைக்கு போகவில்லை. இவர்கள் போட்டோவை போட்டு அந்த மேடையில் பேச வேண்டும் என்பதும் என்னுடைய லட்சியம் கிடையாது. குந்தவையை வீட்டிலேயே குந்த வைத்திருந்திருக்கலாம் என்று நான் சொன்னது என்னுடைய ஆதங்கம். நான் ஒரு மூன்றாவது மனுஷியை பற்றி தான் பேசினேன். இந்த பிரச்சனையில் மூன்று பேரை எடுத்துக்கொண்டால் முதலில் என்னுடைய அன்பு நண்பர் விஜய். இரண்டாவது அவருடைய மனைவி.
https://www.youtube.com/watch?v=5MnCouWrO0k
பார்த்திபன் வீடியோ:
இந்த மூன்றாவது மனுஷி வீட்டில் இருந்திருக்கலாம் சொன்னேன். ஆனால், இதை பெண்களுக்கு எதிராக பேசியதாக சொல்கிறார்கள். அது எனக்கு ஒரு மாதிரி கஷ்டமாக இருந்தது. நான் வருத்தம் தெரிவித்தது ரொம்ப சின்சியராக தான் தெரிவித்திருந்தேன். இப்படி திரிஷாவிடம் இருந்து வரப்போகிறது என்று தெரிந்திருந்தால் நான் வருத்தம் தெரிவித்திருக்கவே மாட்டேன். அதை பார்த்தவுடன் தான் இந்த வீடியோவை பண்ண வேண்டும் என்று எனக்கு உத்வேகம் வந்தது. மூன்றாவது மனுஷியின் மூன்றாம் தரமான ட்விட்டால்தான் இதை பேசுகிறேன். அவரைப் பற்றி பொதுவெளியில் நிறைய விமர்சனங்கள் இருக்கிறது. அதற்கெல்லாம் அவர் பதில் சொல்லவில்லை. நீங்கள் நன்மைக்கு பக்கத்தில் இருக்கவில்லை. உண்மைக்கு பக்கத்தில் இருக்கிறீர்கள். இதனால் உங்களை நான் பாராட்டுகிறேன் என்று கூறியிருக்கிறார்.






