தமிழ் சினிமாவில் யார் சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சை கடந்த சில ஆண்டுகளாக ஒரு விவாத பொருளாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் நடித்து வெளிவந்த வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, அந்த படத்தில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் இன்று கூறியதுதான் பெரிய சர்ச்சையாக மாறியது. அதோடு நடிகர் சரத்குமாரும் சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று ஒரு விழாவிலே கூறியதாக சொல்ல தெரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல ஆகியது.
அதற்குப் பிறகு சோசியல் மீடியாக்களில் சிலை தொடங்க ஆரம்பித்தது. இதை மற்றும் ரஜினி ரசிகர்கள் தங்களுடைய நடிகர் தான் சூப்பர் ஸ்டார் என்று விவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பல விதமான மீன்களையும் போட்டு ஒருவரை ஒருவர் கலாய்த்தும் வந்தனர். இது தொடர்பாக பிரபலங்கள் பலரும் பல விதமான கருத்துக்களை கூறியிருந்தார்கள். நிலையில் தற்போது இயக்குனர் பேரரசு பேசி இருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இயக்குனர் பேரரசு பேட்டி :
சினிமாவில் முதலில் ரஜினி, அஜித், விஜய் என்கிற மாதிரி இருந்தது. ஆனால் இப்ப கொஞ்ச நாளாக ரஜினி- விஜய் சண்டைகள் தான் அதிகமாக இருக்கிறது. அதற்குக் காரணம் எல்லாரும் அஜித் சினிமாவில் ஆக்டிவா இல்லாதது என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மை என்ன என்றால் 20 வருடத்திற்கு அஜித் பைக் ரேஸ் என்றால் போயிடுவாரு. போது சினிமாவில் ப்ரொடியூசர்கள் எல்லாரும் கோவப்பட்டாங்க. பைக் ரேஸ் அவருக்கு ஏதாவது ஆகிடுமோ என்று பயப்பட்டார்கள். அதற்கு அவர்களிடம் அஜித் சார் அப்போதே கோவப்பட்டார்.
அஜித் குறித்து பேரரசு:
அதேபோல் அஜித் சாருக்கு பைக் மற்றும் ரேஸ்களில் தான் விருப்பம் அதிகம். அஜித் சார் நடிப்பு தான் என்னுடைய லட்சியம், அதுக்காக தான் வந்தேன் என்று சொன்னது கிடையாது. நான் நடிக்க வந்தது சம்பாதிக்க தான் என்று ஏற்கனவே சொல்லி இருக்கார். வந்ததுக்கு அப்புறம் சிலருக்கு அதுவாக அமையும். அந்த மாதிரி அமைந்தது அஜித் சாரோட திரைப்பயணம். அந்த சீட்ல வந்ததுக்கு அப்புறம் தான் நமக்கு ரசிகர்கள் இருக்காங்க நம்ம நடிக்கணும் என்று அவர் தெளிவாகி விட்டார். ரஜினி சாரா இல்லை, விஜய் சாரா என்கிற போட்டிக்கு, அஜித் சாரோட கேப்பால் அது மிஸ் ஆய்டும்.
சூப்பர் ஸ்டார் பட்டம் :
‘வாரிசு’ படம் வரும்போது அஜித் சாரோட ஒரு படம் வந்திருந்ததுனா கரெக்டாக இருந்திருக்கும். ஒரு படம் விட்டதுனால அது அவருக்கு லாங் கேப் ஆகிவிட்டது. அதனால் இப்போ எல்லாம் ஏதோதோ பேசுறாங்க. இதை எல்லாம் உருவாக்குவது யார்னா சினமாவுல இருக்கிறவங்க தான் லூஸ் டாக் விடறாங்க. சூப்பர் ஸ்டார் இருக்கும்போது மற்றொருவரை சூப்பர் ஸ்டார் என்று சொல்வது தப்பு. அதை ரஜினி சாரோட இடத்தில் இருந்து யோசித்துப் பார்க்க வேண்டும். 40 வருஷமா சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்ட ஒருவர், இன்னைக்கும் மார்க்கெட்டில் நம்பர் 1 ஆக இருக்கிறார்.
தேவையில்லாத விவாதம்:
அப்படி இருக்கும்போது அவராக சொல்றது வேற. என்னுடைய இடத்திற்கு வேற ஒருத்தர்வரலாம் என்று சொல்வது பெருந்தன்மை. ஆனா, இன்னொருத்தர் அதை சொல்லக்கூடாது. ரஜினி சார் மாதிரி ஒரு சூப்பர் ஸ்டார் இருக்கும்போது, மற்றொருவரை இவங்க தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லக்கூடாது. அது தேவையில்லாத விவாதத்தை உண்டாக்கும். இதனால் தேவையில்லாத ரசிகர்களிடையே பிரச்சினைகள் உண்டாகிறது. எனக்கு இதில் உடன்பாடு இல்லை. சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சார். தளபதி என்றால் அது விஜய் சார். இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளார்.