திருப்பதி படம் தோல்வியடைந்ததற்கு இதான் காரணம். இப்படி ஒரு பிரச்னையா. பேரரசு சொன்ன உண்மை.

0
53776
perarasu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னொரு காலத்தில் பிரபல இயக்குனராக கொடி கட்டி பறந்தவர் இயக்குனர் பேரரசு. மேலும், இவர் ஆட்டம், பாட்டம், சண்டை, பாசம், நகைச்சுவை, ஆக்ஷன், அதிரடி வசனங்கள் என்று மசாலாவாக படங்களை தருவதில் வல்லவர். அதுமட்டும் இல்லாமல் இவருடைய பட பெயர்கள் எல்லாமே ஊர் பெயர்களை கொண்டிருக்கும். அதை வைத்தே எளிதாக இவரை கண்டுபித்து விடலாம். அதோடு தான் இயக்கும் படங்களில் ஏதாவது ஒரு காட்சியில் சிறு வேடங்களில் தோன்றி நடிப்பார். இவர் திருப்பாச்சி, சிவகாசி, தர்மபுரி, திருப்பதி, பழனி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல சூப்பர் டூப்பர் படங்களை இயக்கி உள்ளார். தளபதி விஜய் வைத்து மட்டும் சிவகாசி, திருப்பாச்சி என்ற இரண்டு மாஸ் படங்களை இயக்கினார்.

-விளம்பரம்-
Image result for Perarasu With Vijay

- Advertisement -

இந்த இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் பேரரசு அவர்கள் சினிமா உலகில் கடந்த 15 ஆண்டுகளாக உள்ளார். ஆனால், இவர் இதுவரை தமிழில் 9 படங்களை மட்டும் இயக்கி உள்ளார். மலையாளத்தில் இரண்டு படங்களை இயக்கி உள்ளார். இப்படி மாஸ் படங்களை கொடுத்து வந்த இயக்குனர் பேரரசின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டதால் இவர் சில காலமாக சினிமா துறையை விட்டு விலகி இருந்தார். சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று அளித்து உள்ளார். அதில் விஜய் குறித்தும், அஜித் குறித்தும் பேசி உள்ளார். அதில் அவர் கூறியது

இதையும் பாருங்க : சிவகார்த்திகேன் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய சின்மயி. என்ன நடக்க போகுதோ.

நான் 2005 ஆம் ஆண்டு தளபதி விஜய்யை வைத்து திருப்பாச்சி என்ற படத்தையும், சிவகாசி என்ற படத்தையும் இயக்கினேன். இந்த இரண்டு படமுமே எனக்கு பெயரளவு வெற்றி கொடுத்தது. உடனே இடைவெளியில்லாமல் அஜித்தை வைத்து ‘திருப்பதி’ என்ற படத்தை இயக்க சொன்னார்கள். அதுவும் அவர்கள் ஏப்ரல் மாதமே அந்த படத்தை திரையரங்கில் வெளியிட முடிவு செய்துவிட்டார்கள். படம் தேதியை அறிவித்த பின்னர் தான் என்னை படம் ஸ்கிரிப்ட் எழுத சொன்னார்கள். நான் அப்போது தான் அதாவது ஜனவரி மாதம் தான் விஜய்யை வைத்து சிவகாசி படத்தை இயக்கி வெளியிட்டேன். பின் உடனே மூன்று மாதங்களில் அஜித்தை வைத்து திருப்பதி படத்தை இயக்கினேன். அதனால் தான் அஜித்தின் திருப்பதி படம் பெரிய அளவு பேசப்படவில்லை.

-விளம்பரம்-
Image result for ajith thirupathi movie stills

அது மட்டும் இல்லாமல் அஜித்தின் திருப்பதி படம் தோல்விக்கு காரணம் நானே என்று கூட சொல்லலாம். ஏனென்றால், நான் அதிக அளவு நேரம் வாங்கி ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு இருந்தால் அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கும். அப்போது இவர்கள் இருவருமே முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வந்தவர்கள். ஆனால், விஜயின் திருப்பாச்சி, சிவகாசி படம் எடுக்க எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. அதனால் தான் நான் அந்த படத்தில் நிறைய சீன்களையும் மாஸ் டயலாக்களையும், ஆக்ஷன் காட்சிகளையும் வைத்திருந்தேன். இதனை தொடர்ந்து தர்மபுரி திருவண்ணாமலை என பல படங்களில் இயக்கி வந்தேன். நான் படம் இயக்குவதில் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொண்டேன். அது என்னவென்றால் ஒரு படம் இயக்க கால இடைவெளியும், ஸ்கிரிப்ட் தயாராகும் வரை படத்தின் தேதியை வெளியிடக்கூடாது என்றும் தெரிந்து கொண்டேன்.

Image result for sivakasi movie

தற்போது விஜயை வைத்து “தளபதி 65” படத்தை இயக்குகிறீர்களா? என்று பல பேர் பல கேள்வி கேட்டார்கள். விஜய் வைத்து படத்தை இயக்க வேண்டும் என்றால் இப்போது இருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு நான் என் கதையை ரெடி பண்ண வேண்டும். திருப்பாச்சி, சிவகாசி காலத்தில் இருந்த விஜய் வேற. இப்போதிருக்கும் விஜய் பெரிய அளவு விஸ்வரூபமெடுத்து வளர்ந்திருக்கிறார். அதற்கேற்றவாறு படத்தை நான் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் ரசிகர்கள் எல்லோரும் ஏமாற்றத்துடன் இருப்பார்கள். நான் மீண்டும் சினிமாவில் படம் இயக்க தயாராக உள்ளேன். கூடிய விரைவில் என்னுடைய படம் குறித்து தகவல் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.

Advertisement