விஜய் தானத்தளபதி என்று நிரூபித்து விட்டார். பிரபல இயக்குநர் பாராட்டி ட்வீட்.

0
966
Vijay
- Advertisement -

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ‘தளபதி’ விஜய். ‘சர்கார்’ படத்துக்கு பிறகு ‘தளபதி’ விஜய் டபுள் ஆக்ஷனில் அசத்திய ‘பிகில்’ திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்து மாஸ் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படத்தை இயக்கி கொண்டிருக்கும் இயக்குநர் ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ். அதுவும் மாஸ்டரில் விஜய் மட்டும் அல்ல, நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். அவருக்கு இதில் மாஸான வில்லன் வேடமாம்.

-விளம்பரம்-

இந்த படத்துக்கான ஷூட்டிங் முற்றிலும் ஏற்கனவே நிறைவு பெற்றது. இதன் இறுதிக்கட்ட வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது. உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : ‘குடும்ப பெண்ணா பாத்து கல்யாணம் பெண்ணுன்னு சொன்னேன்’ அஜித்துடன் நடித்த நடிகரின் ரீ-வைண்ட் வீடியோ.

- Advertisement -

திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது.

கொரோனா நிவாரண பணிகளுக்காக பல முன்னணி நடிகர்கள் நிதியுதவி கொடுத்து வந்தனர். அப்போது, முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் ஏன் இன்னும் நிதியுதவி கொடுக்கவில்லை என்று பலர் பல விதமாக கேள்வி எழுப்பிய வண்ணமிருந்தனர். இந்நிலையில், நடிகர் ‘தளபதி’ விஜய் கொரோனா நிவாரண பணிகளுக்காக ரூ.1.30 கோடி நிதியுதவி வழங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளி வந்தது.

இதையும் பாருங்க : விஜய்யின் பெருந்தன்மையை பாராட்டி நன்றி தெரிவித்த முதலமைச்சர். வைரலாகும் வீடியோ.

-விளம்பரம்-

தற்போது, இது தொடர்பாக சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் ‘தளபதி’ விஜய்யை வைத்து ‘திருப்பாச்சி, சிவகாசி’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் பேரரசு ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். அந்த பதிவில் “ஒருவரை அவசரப்பட்டு குறை கூறுவதே, மனிதர்களின் பெருங்குறை! தளபதி தானத்தளபதி என்று மீண்டும் நிரூபித்து விட்டார். திராவிடத்தை நேசிக்கும் தமிழனாய் தளபதி மிளிர்கிறார்! தளபதி விஜய்க்கு தலைவணங்கி நன்றிகள் கோடி!” என்று இயக்குநர் பேரரசு தெரிவித்திருக்கிறார்.

Advertisement