விஜய்யின் பெருந்தன்மையை பாராட்டி நன்றி தெரிவித்த முதலமைச்சர். வைரலாகும் வீடியோ.

0
11142
- Advertisement -

ஒட்டுமொத்த உலகமும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்து போய் உள்ளது. இந்த நிலைமையை சரிசெய்ய உலகமே போராடி வருகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸின் பரவல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனாவினால் 21700 பேர் பாதிக்கப்பட்டும், 686 பேர் பலியாகியும் உள்ளனர். உயிரை கொன்று வரும் இந்த வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை நீட்டித்து உள்ளார்.

-விளம்பரம்-
Vijay

ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து, கடைகள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவினால் மக்கள் வாழ்வாதாரத்திற்காக மிகவும் கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும், தினகூலி நம்பி வாழும் மக்கள்களுக்கு உணவு தட்டுப்பாடு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : பீச்சில் அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட பிரியதர்ஷினி. வைரலாகும் #Throwback புகைப்படம்.

- Advertisement -

அதே போல சினிமா துறையிலும் பலர் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை என பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். மேலும், மத்திய, மாநில அரசுகளுக்கு நிதியுதவி செய்ய விரும்புவோர் தாராளமாக தரலாம் என அறிக்கை விடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் விஜய் அவர்கள் ரூ. 1.30 கோடி ரூபாயை நிதியுதவியாக வழங்கியுள்ளார். முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சமும் வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து திரைப்பட தொழிலாளர் சங்கத்திற்கு 25 லட்சமும், கேரளாவுக்கு 10 லட்சம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரிக்கு தலா 5 லட்சமும் நிதியுதவியாக வழங்கியுள்ளார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ வேண்டி தன்னுடைய ரசிகர் மன்றங்களுக்கும் நடிகர் விஜய் அவர்கள் நிதியுதவி வழங்கியுள்ளார். தளபதி விஜய் அவர்களின் இந்த செயலை பார்த்து பலர் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் திரு.நாராயண சாமி அவர்கள் விஜய் அவர்களின் இந்த செயலை குறித்து பாராட்டி வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்.

இதையும் பாருங்க : திருமணத்திற்கு முன்பே தன் காதல் கணவன் இயக்கத்தில் சிவாவுன் நடித்துள்ள பிரியா. வைரலாகும் வீடியோ.

அதில் அவர் கூறியது, புதுச்சேரியில் பல அழகிய இடங்கள் இருக்கிறது. பல நடிகர்களும் தங்கள் படப்பிடிப்பை புதுச்சேரியில் தான் நடத்துகின்றனர். அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் பாண்டிசேரி அரசு செய்து தருகின்றது. இதனை மறக்காத நடிகர் விஜய் அவர்கள் பாண்டிசேரி அரசாங்கத்திற்கு 5 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கியுள்ளார். அவருக்கு நான் மனதார என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அந்தப் பணத்தை மக்களுக்கு நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். மற்ற நடிகர்களும் விஜய்யை போல் முன்வந்து புதுச்சேரிக்கு உதவ வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இப்படி இவர் கூறிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் தான் கொரானோ தடுப்பு நிவாரண நிதியாக ரூ.1.25 கோடி ரூபாயை நடிகர் அஜீத்குமார் வழங்கி இருந்தார். அதில் பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரணநிதிக்கு தலா 50 லட்சம் மற்றும் திரைப்பட தொழிலாளர் சங்கத்துக்கு FEFSI சங்கத்திற்கு ரூ.25 லட்சமும் வழங்கி இருக்கிறார் நடிகர் அஜீத்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement