‘குடும்ப பெண்ணா பாத்து கல்யாணம் பெண்ணுன்னு சொன்னேன்’ அஜித்துடன் நடித்த நடிகரின் ரீ-வைண்ட் வீடியோ.

0
1851
ajithshalini
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் என்றும் ஸ்பெஷல் ஜோடி என்றால் அது அஜித் ஷாலினி ஜோடி தான். தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்துடன் பல ஆண்டுகளாக முன்னனி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அஜித். இவர் பெயரை பற்றி சொன்னதும் அவரது மனைவி ஷாலினி பற்றி சொல்லாமல் இருக்கவா முடியும். அதுவும் இன்று (ஏப்ரில் 24) அஜித்-ஷாலினியின் திருமண நாளையொட்டி ஒட்டி அஜித் ரசிகர்கள் ஷாலினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், அஜித் – ஷாலினி பற்றி பல சுவாரசியமான தகவல்களை தோண்டி எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அப்படி ஒரு சுவாரசியமான தகவல் தான் இதுவும். தமிழ் சினிமா பிரபலங்களில் பல தம்பதியர்கள் இருந்து வந்தாலும் அஜித்- ஷாலினி ஜோடி தான் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர்கள் பட்டியலில் சீனியர் என்றே கூறலாம். தமிழ் சினிமாவில் பேபி ஷாலினியாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக வளம் வந்தவர் நடிகை ஷாலினி. நடிகை ஷாலினி, அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது நமக்கு தெரியும்.

இதையும் பாருங்க : 4 ஆண்டுகளாக சினிமாவில் பிரேக் எடுத்துள்ள லட்சுமி மேனன். ரசிகருடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம்.

- Advertisement -

திருமணத்திற்கு பின்னர் அஜித் – ஷாலினி தம்பதியருக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் பிறந்தனர்.திருமணத்திற்கு பின்னர் நடிப்பை நிறுத்தி விட்டு குடும்பதத்தை கவனித்து வருகிறார் நடிகை ஷாலினி. இந்த நிலையில் அஜித்துடன் அமர்க்களம் படத்தில் நடித்த போது நடந்த ஒரு சம்பவத்தை பிரபல இயக்குனரும் நடிகருமான ரமேஷ் கண்ணா கடந்த ஆண்டு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

வீடியோவில் 11 : 40 நிமிடத்தில் பார்க்கவும்

ரமேஷ் கண்ணா முதன்முதலில் இயக்குநராக அறிமுகம் ஆனது அஜித் நடித்த ‘தொடரும்’ படத்தின் மூலம்தான். அதன் பின்னர் அஜித்துடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இறுதியாக அஜிததுடன் 2004 ஆம் ஆண்டு வெளியான வீரம் படத்தில் நடித்திருந்தார். அந்த பேட்டியில் பேசியுள்ள ரமேஷ் கண்ணா, அஜித்துடன் அமர்க்களம் படத்தில் நடித்தபோது’ நடிகையை திருமணம் செய்யாதே. எல்லாரும் டைவர்ஸ் ஆகி போயிடுறாங்க.

இதையும் பாருங்க : விஜய்யின் பெருந்தன்மையை பாராட்டி நன்றி தெரிவித்த முதலமைச்சர். வைரலாகும் வீடியோ.

-விளம்பரம்-

ஒரு நல்ல குடும்ப பெண்ணாக பார்த்து திருமணம் செய்துகொள் ‘ என்று அஜித்திற்கு அட்வைஸ் செய்தேன் . ஆனால், அதன் பின்னர் தான் இயக்குனர் சரண் ரமேஷ்என்னிடம் , அஜித்-ஷாலினி காதலிப்பதைதெரிவித்தார். இதனை கேட்டதும் எனக்கு மிகவும் தர்மசங்கடமாக ஆகியுள்ளது. இருப்பினும் அஜித் மற்றும் ஷாலினியின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்தினேன் என்று கூறியுள்ளார் ரமேஷ் கண்ணா.

Advertisement