கே.ஜி.எஃப் 3 குறித்து இயக்குனர் சொன்ன விஷயம், வெளியான வெறித்தனமான அப்டேட்- உற்சாகத்தில் ரசிகர்கள்

0
395
- Advertisement -

‘கே.ஜி.எஃப் 3’ படம் குறித்து இயக்குனர் கொடுத்திருக்கும் அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக யாஷ் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் கன்னட சினிமாவின் ‘ராக்கிங் ஸ்டார்’ என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது ‘கே.ஜி.எஃப்’ திரைப்படம் தான். இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை கொண்டது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து கே.ஜி.எஃப் 2 படம் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருந்தார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்து இருந்தார் மற்றும் பவுன் கௌடா ஒளிப்பதிவு செய்து இருந்தார். படத்தில் கருடனை கொன்று கேஜிஎப்பில் கால் தடம் பதித்து இரண்டாம் கதையை தொடங்கினார் யாஷ் . ஆனால், அது அங்கிருக்கும் பலருக்கு பிடிக்காமல் போகிறது.

- Advertisement -

கே.ஜி.எஃப் 2 கதை:

கே.ஜி.எஃப் இடத்தில் இருந்து யாஷை தூக்க வேண்டும் என்று பலரும் திட்டங்களை தீட்டுகின்றனர். இறுதியில் யாஷ் கேஜிஎப் மக்களை காப்பாற்றினாரா? எதிரிகளை துவம்சம் செய்தாரா? மக்களின் நிலைமை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் யாஷ் தனி ஒருவனாக படத்தை தாங்கி சென்றிருக்கிறார். மாஸ் ஹீரோவாக எல்லோர் மனதிலும் நின்றார். இயக்கம், திரைக்கதை என இரண்டிலுமே பிரசாந்த் நீல் மிரட்டி இருக்கிறார்.

படம் குறித்த தகவல்:

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் 2 மடங்கு மாசாக உருவாக்கியிருந்தார் இயக்குனர். விறுவிறுப்பான கதைகளும், காட்சிகளுக்கு காட்சி பிரம்மாண்டம், அழுத்தமான வசனம், ஆர்ப்பரிக்கும் சண்டைக்காட்சிகள், பிரம்மிக்க வைக்கும் ஆக்ஷன் என படத்திற்கு தேவையான அனைத்தையுமே கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்தார் இயக்குனர். இந்த படம் உலக அளவில் புகழ் பெற்றது. அதோடு கன்னட மொழியில் இதுவரை எந்த படமும் செய்யாத சாதனையை இந்த படம் செய்து இருந்தது.

-விளம்பரம்-

கே.ஜி.எஃப் 3 குறித்த தகவல்:

அதுமட்டுமில்லாமல் கே.ஜி.எஃப் 2 படத்தின் இறுதி காட்சியில் மூன்றாம் பாகம் வரவிருக்கும் என்று காண்பிக்கப்பட்டு இருந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த படம் வருமா? வராதா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருந்தது. ஒரு கட்டத்தில் கே.ஜி.எஃப் 3 வராது என்று நினைத்து விட்டார்கள். இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் பிரசாந்த் நீல் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் பேட்டி:

அதாவது சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் பிரசாந்த், கே.ஜி.எஃப் 3 படம் கண்டிப்பாக நடக்கும். அதற்கான ஸ்கிரிப்ட் ஒர்க்கை நான் ஏற்கனவே எழுதிவிட்டேன். மூன்றாம் பாகம் எடுக்கவில்லை என்றால் கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தின் இறுதியில் அது குறித்து காட்சியை வைத்திருக்க மாட்டோம். அனைத்தையும் திட்டமிட்டு கே.ஜி.எஃப் 3 உடைய படப்பிடிப்பு துவங்கும். கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Advertisement