உங்க அப்பா முன்னால பண்ணுங்க – விஜயை கடுமையாக விமர்சித்த ராஜகுமாரன். வைரலாகும் வீடியோ.

0
2164
Vikram
- Advertisement -

விஜயின் வாரிசு படத்தை விமர்சித்து இயக்குனர் ராஜகுமாரன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக தளபதி விஜய் திகழ்ந்து கொண்டு இருக்கின்றார். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையம், வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட்.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகிபாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, ஷ்யாம் போன்ற பலர் நடித்து இருந்தார்கள். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். குடும்ப பின்னணியை மையமாக கொண்ட கதை.

- Advertisement -

வாரிசு திரைப்படம் :

இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது. மேலும், வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் விஜயின் வாரிசு படத்தை விமர்சித்து நடிகை தேவயானியின் கணவரும், இயக்குனருமான ராஜகுமாரன் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ராஜகுமாரன் அளித்த பேட்டி:

வாரிசு படத்தில் சரத்குமார் உடைய நடிப்பு தான் சிறப்பாக இருந்தது. அவரைத் தவிர வேறு எந்த நடிகருமே சரியாக நடிக்கவில்லை. குறிப்பாக, விஜய் தப்பு தப்பாக நடித்திருக்கிறார். ஒரு தந்தையின் முன் ஒரு மகன் இப்படித்தான் ஆணவமாக, திமிராக பேசுவதா? இதை விஜய் தன்னுடைய தந்தையிடம் செய்யலாம் திரையில் செய்யக்கூடாது. காரணம், இவர் செய்வதை பார்த்து அவருடைய ரசிகர்கள் அப்படியே தங்களுடைய தந்தையின் முன் பேசுவார்கள்.

-விளம்பரம்-

லியோ படம் குறித்த தகவல் :

இது ரொம்ப ரொம்ப தவறான செயல் என்று ராஜகுமாரன் கோபமாக பேசி இருக்கிறார். தற்போது இதை தான் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள். ஏற்கனவே விக்ரமிற்கு நடிக்கவே தெரியாது என்று ராஜகுமரன் பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது லோகேஷ் தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன் லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது.

படம் குறித்த தகவல்:

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இது அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் தான் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் நா ரெடி பாடல் வெளியாகி இருந்தது .

Advertisement