நாடார் கடை, செட்டியார் மில், ஐயர் ஹோட்டல் – மாறிச்செல்வராஜ் பேச்சுக்கு பேரரசு கொடுத்த பதிலடி.

0
4365
- Advertisement -

தேவர் மகன் படம் குறித்து மாரி செல்வராஜ் கூறியதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் இயக்குனர் பேரரசு பதிவிட்டு கவிதை தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படம் ஜூன் 29ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் விழா நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட மாரி செல்வராஜ் கூறியது, தேவர்மகன் படத்தை பார்த்து தான் பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை இயக்கினேன். கமலஹாசனின் தேவர் மகன் படம் சாதி பெருமையை பெருமையை அப்பட்டமாக பேசி இருந்தது. மாமன்னன் உருவாவதற்கும் தேவர் மகன் படம் தான் காரணம்.

- Advertisement -

விழாவில் மாரி செல்வராஜ் சொன்னது:

தேவர் மகன் பார்க்கும்போது ஏற்பட்ட வலி, அதிர்வுகள் என எல்லாமே இருக்கிறது. தேவர் மகனில் இருக்கும் இசக்கி தான் மாமன்னன். அந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பது தான் மாமன்னன் படம் என்று கமலஹாசனை வம்புக்கு இழுத்து இருக்கிறார் மாரி செல்வராஜ். இப்படி கமலஹாசனின் தேவர்மகன் படத்தை மாரி செல்வராஜ் பேசியது குறித்து கமல் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மாரி செல்வராஜூக்கு எதிராக மீம்ஸ்களை தெரிக்க விட்டு வருகிறார்கள். தற்போது மாரி செல்வராஜ் கூறிய கருத்துக்கள் தான் இணையத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இயக்குனர் பேரரசு பதிவு:

இப்படி படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே படம் குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பேரரசு அவர்கள் மாரி செல்வராஜ் தேவர் மகன் படம் குறித்து பேசியதற்கு கமல் மீது குற்றம் சாட்டி பதிவு ஒன்றை போட்டிருந்தார். தற்போது மாரி செல்வராஜுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கவிதை வடிவில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர்,

-விளம்பரம்-

“ஊரில்
நாடார் கடை
செட்டியார் மில்
ஐயர் ஹோட்டல்
என்று நாம் அழைத்தபோது
எந்த பிரச்சனையும் இல்லை!

வ.உ.சிதம்பரம்பிள்ளை
முத்துராமலிங்கத் தேவர்
உ.வே.சுவாமிநாத அய்யர்
ராமசாமி படையாச்சி
சரோஜினி நாயுடு
இப்படி வரலாறு படிக்கும்போது
நாட்டில்
எந்தப் பிரச்சினையும் இல்லை!
ஜாதிகள் இல்லையடி பாப்பா
என்பதைக்கூட
கோனார் தமிழ் உரையில்தானே
படித்தோம்
அப்பொழுது நமக்குள்
பேதங்கள் தோன்றவில்லை!

ஏவிஎம் மெய்யப்பச் செட்டியார்
வாகினி நாகிரெட்டி
தேவர் பிலிம்ஸ் சின்னப்ப தேவர்
சிவஶ்ரீ பிக்சர்ஸ் மணி அய்யர்
இப்படி தயாரிப்பாளர்களை
ஜாதியைச் சொல்லி அழைத்தபோது
திரைத்துறையில்
எந்தப் பிரச்சினையும் இல்லை!

குறத்தி மகன்
தேவர் மகன்
சின்னக் கவுண்டர்
அய்யர் தி கிரேட்
இப்படி ஜாதிப் பெயரில்
படங்கள் வந்தபோதும்
எந்தப் பிரச்சினையும் இல்லை!
இன்று
தொட்டதெற்கெல்லாம்
ஜாதிப் பிரச்சனை!
யார் காரணம்?

ஜாதி, மதம் மறந்து
கலைஞனாக மட்டுமே
தன்னை அர்ப்பணித்தவர்களுக்குள்
ஜாதி வெறியை வித்திட்டவர்கள்
யார்?

இன்று
உடன் பணிபுரிபவரின்
ஜாதியை எவனும்
ஆராய்வதில்லை!
மீண்டும் அந்த
ஆராய்ச்சியை
ஆரம்பித்து வைத்துவிடாதீர்கள்!

வாய்ப்பு கேட்பவனிடம்
எவன் ஜாதியை கேட்கிறானோ
அவனே மனிதப்பிழை!

பெரும்பாலும்
சமநிலை அமைந்துவிட்ட நிலையில்
மீண்டும் ஒற்றுமைக்கு
சமாதி கட்டிவிடாதீர்கள்!
தெளிந்த குளத்திற்குள்
பாறாங்கல்லை எறியாதீர்கள்
ஜாதிப்பற்று மனித இயல்பு
ஜாதி வெறி மனிதத்தின் அழிவு!” என்று கூறி இருக்கிறார்.

Advertisement