கமல் காரும் கொடுக்கல, 13 லட்சமும் கொடுக்கல – புதிய குண்டை தூக்கி போட்ட ஷர்மிளாவின் தந்தை.

0
5050
- Advertisement -

கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கமல், கார் பரிசளித்ததாக வெளியான செய்திக்கு ஷர்மிளாவின் தந்தை மறுப்பு தெரிவித்துள்ளார். தற்போது சோசியால் மீடியாவில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருப்பது கோவை ஓட்டுனர் ஷர்மிளா பற்றி தான். சில மாதங்களாகவே இவர் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் கோவை தனியார் பேருந்தில் முதல் பெண் டிரைவராக புகழ் பெற்றவர். இவருடைய தந்தை ஆட்டோ ஓட்டுபவர். இவர் தன்னுடைய தந்தையிடம் தான் ஓட்டுநர் தொழிலை கற்றுக் கொண்டார்.

-விளம்பரம்-

மேலும், தன்னுடைய தந்தை ஆசையை நிறைவேற்றுவதற்காக இவர் கனரக வாகனங்களை ஓட்ட பழகினார். பின் போராடி தனியார் பேருந்தில் டிரைவர் ஆனார். கொஞ்ச நாட்களிலேயே இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்தார். ஷர்மிளாவின் இந்த முயற்சி அனைவர் மத்தியிலும் பரட்டை பெற்றிருந்தது. அது மட்டும் இல்லாமல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே இவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். சமீபத்தில் கூட பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் ஷர்மிளா பேருந்தில் ஏறி சிறிது நேரம் பயணித்து அவரிடம் கலகலப்பாக பேசி பாராட்டியும் இருந்தார்.

- Advertisement -

பெண் ஓட்டுனர் ஷர்மிளா குறித்த தகவல்:

பின் திமுக துணை பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி அவர்கள் ஷர்மிளா ஓட்டிய பேருந்தில் பயணித்திருந்தார். அப்போது அவர் சர்மிளாவை பேருந்தில் அணைத்து பாராட்டி கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசாக அளித்திருக்கிறார். பின் கண்ரக்டருக்கும் ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அங்கு பெண் கண்டக்டர் ஒரு மாதிரியாக பேசுகிறார் நான் ரிலீவ் ஆகிக்கொள்கிறேன் என்று சர்மிளா ஏற்கனவே கூறியிருக்கிறார். பின் தன்மானம் தான் முக்கியம் என்று ஷர்மிளா வேலையை விட்டு வெளியேறினார்.

கார் பரிசளித்தாரா கமல் :

இது தொடர்பாக பேட்டியும் அளித்து இருந்தார். இதை அடுத்து பலரும் ஷர்மிளாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். ஷர்மிளா வேலையை விட்டு நின்ற விவகாரம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக இருக்கிறது. அது மட்டுமில்லாமல் பேட்டியில் ஷர்மிளா அவர்கள் பேருந்து ஓட்டவில்லை என்றால் நான் ஆட்டோ, கார் வாங்கி ஓட்டி பிழைத்துக் கொள்வேன் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

ஷர்மிளா தந்தை விளக்கம் :

இந்த நிலையில் நடிகர் கமலஹாசன் அவர்கள் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கார் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார் என்று சமூக வளைத்தளத்தில் செய்திகள் வெளியானது. இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இந்த செய்தி வைரலானதை தொடர்ந்து மீண்டும் ஷர்மிளா சமூக வலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக மாறினர். இப்படி ஒரு நிலையில் கமல் தன் மகளுக்கு காருக்கும் கொடுக்கல 10 லட்சமும் கொடுக்கவில்லை என்று ஷர்மிளாவின் தந்தை புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் ‘காரெல்லாம் கொடுக்கவில்லை. காருக்காக மூன்று லட்ச ரூபாய் அட்வான்ஸ் ஆக செக் கொடுத்திருக்கிறார். கார் வாங்கிவிட்டு பின்னர் அவரிடம் அதனை தெரிவிக்க வேண்டும். எல்லாரும் கார் வாங்கிட்டீங்களா கார் வாங்கிட்டீங்களா என்று கேட்கிறார்கள் ஆனால் யாரெல்லாம் கொடுக்கவில்லை. என் மகளுக்கு வேலை போனதில் இருந்தே நாங்கள் மீண்டு வரவில்லை.’ என்று குறியுள்ளார்.

Advertisement