சூப்பர் ஸ்டார் நடித்து சமீபத்தில் வெளியான ‘காலா’ படத்திற்கு பின்னர் அணைத்து சினிமா ரசிகர்களின் பார்வையும் இயக்குனர் பா. ரஞ்சித் மீது தான் திரும்பியுள்ளது. ‘காலா’ படம் பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்ற போதும், இந்த படம் 3 நாட்களில் 100 கோடி ரூபாயையும் வசூல் செய்தது.
இயக்குனர் ரஞ்சித் சூப்பர் ஸ்டாரை வைத்து தொடர்ந்து இரண்டு படங்களை இயக்கிவிட்டார். அதுவும் சமீபத்தில் வெளியான ‘காலா’ படம் ரஜினி படமாக கருத்தப்படமால் முழுக்க முழுக்க ரஞ்சித்தின் படமாகவே கருதப்படுகிறது. இயக்குனர் ரஞ்சித்திற்கு மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த படம் பாலிவுட் சினிமாவிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இரஞ்சித் பாலிவுட்டில் களமிறங்குகிறார் என்ற பேச்சு கோலிவுட்டை கலக்கிக்கொண்டிருந்தது. இந்திய சுதந்திரப்போராட்ட காலகட்டத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காகப் போராடிய சமூகப் போராளி, பிர்சா முண்டாவின் வாழ்க்கையைப் படமாக்கப்போவதாகத் தகவல் பரவியது.
Johar to all! Elated to be making my Bollywood directorial debut with @namahpictures @shareenmantri @kishor_arora for the film on revolutionary leader #BirsaMunda.Film will be based on #MahaswetaDevi’s “Aaranyer Adhikar”(Jungle Ke Davedar).Magizhchi! https://t.co/suGebUfNaO
— pa.ranjith (@beemji) November 15, 2018
தற்போது இந்தத் தகவலை பா.இரஞ்சித் உறுதிசெய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “மஹாஸ்வேதா தேவி எழுதிய `ஆரன்யெர் அதிகர்’ நாவலை மையமாகக்கொண்டு பிர்ஷா முண்டாவின் வாழ்க்கைக் கதை படமாகத் தயாராக உள்ளது. இந்தப் படம் மூலம் பாலிவுட்டில் நான் இயக்குநராக அறிமுகமாகிறேன். இந்தப் படத்தை நமா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினர் தயாரிக்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார். இந்தத் தகவலை தயாரிப்பு நிறுவனமும் உறுதிசெய்துள்ளது.