அஜித் உண்மையில் ஒரு மாமேதை தான் ! உண்மை சம்பவம்.

0
2131
ajith-siva-saran

சமீபத்தில் இயக்குனர் சரணின் பேட்டி ஒன்றை பார்த்தபோது அஜீத் மீது கொஞ்சம் மரியாதை வந்தது. அசல் படத்திற்கு முன்பு காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் என அஜித்-சரண் கூட்டணி ஏற்கனவே இணைந்து பெருவெற்றி பெற்றிருந்தது.
Ajith ஆனால் அசல் அப்படி இல்லை. அப்போது படம் பார்த்தவர்கள், குறிப்பாக என்னைப் போன்ற சரண் ரசிகர்கள், “சரண் ஒழுங்கா எடுத்திருப்பாரு, அஜித் தான் உள்ள புகுந்து குழப்பிருப்பாரு,” என திட்டியபடியே வெளியேறினார்கள்.அசலில் அஜித்தின் தலையீடு ஃபர்ஸ்ட்லுக் முதல் படப்பிடிப்பு வரை எல்லாவற்றிலுமே இருந்திருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து rush பார்த்தபோதுதான் தேவையில்லாமல் தலையிட்டு படத்தை கெடுத்துவிட்டோம் என அஜித்திற்கு புரிந்திருக்கிறது.

இதையும் படிங்க: ஆக்ஸ்ஃபோர்டு (OXFORD) டிக்ஸ்னரிக்கே ‘தல’ அஜித் தான் உதாரணம் ! விவரம் உள்ளே.

ஆனால் அஜித் தலையீடு இல்லாமல் மொக்கையாகும் படங்களுக்கு அஜித் எள்ளளவும் பொறுப்பேற்க மாட்டார். ஆழ்வார் படத்தை டப்பிங்கின் போது படத்தைப் பார்த்த அஜித், “என்கிட்ட என்ன சொன்ன? என்ன எடுத்து வச்சிருக்க? ஒரு வாய்ப்பு கொடுத்தேன் வீணாக்கிட்ட,” என இயக்குனரிடம் சொல்லிவிட்டு கோபமாக எழுந்துபோனதை டப்பிங் ஸ்டூடியோவில் இன்னமும் சொல்வார்கள். நிற்க.
அஜித்திற்கு ஹாலிவுட் படங்களின் மேல், அவற்றின் மேக்கிங்கின் மேல் ஒரு பெரிய ஈர்ப்பு உண்டு. அது அசலிலும், விவேகத்திலும் அப்பட்டமாக வெளிப்படுவதை பார்க்கலாம். அதனால் விவேகம் இப்படி ஆனதற்கு சிறுத்தை சிவாவை மட்டும் என்னால் பொறுப்பாளர் ஆக்க முடியவில்லை.
Ajith
ஏனெனில் சிவா புதிய வித்தியாசமான கதைகளை எடுப்பவர் இல்லையென்றாலும் சாதாரண வழமையான காட்சிகளைக் கூட மாஸ் ஆக்கும் திறமையான இயக்குனர். அதற்கு அவர் ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளர் என்பதும் ஒரு காரணம். ஆக, அஜித் அடுத்த படத்தையும் சிவாவிடம் கொடுத்திருப்பதும் அசலை போலவே விவேகத்திலும் அஜீத்தின் பங்கு இருந்தது என்பதையே நிரூபிக்கிறது.

எனவே அடுத்த படத்தில் முழு க்ரியேட்டிவ் சுதந்திரம் சிவாவிடம் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக அது விவேகம் மாதிரி இருக்காது என நம்பலாம். சிவாவுக்கு வாழ்த்துகள்.

Reference -டான் அசோக்.